Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
தனியார்மயம்

- ந.தேசநேசன்

அம்மனுக்குச் சுமந்த
முளைப்பாரிகளை
திருவிழாவின் உச்சத்தில்
சீதனமாய்
உள்வாங்கி கொடையாய் வழங்கும்
வயல் வெளிகளுக்கும்
தோட்டச் செடிகளின்
வேர்களுக்கும்
வீண்மீன்கள் நீத்தி
ஆமைகள்
விளையாடிப் பதுங்கிய
எங்கள்
ஊர்க்கிணறு
பசியைத் தணித்த காலம் போய்
கிரையத்திற்கு
பண்ணையார் வாங்கிய
கதையை
கண் கலங்கிச் சொல்லும்
ஆத்தாவின்
காலைச் சுற்றி பசியில்
குட்டிகள் ஈன்ற பூனை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.