Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சினேகிதம்
வெ.அருண்பாரதி

இப்போதெல்லாம்
அலைபேசியின் குறுந்தகவல்களோடு
நின்று விடுகிறது
நம் சினேகிதம்

அதிலும்
தனிப்பட்ட விசாரிப்புகள்
ஏதுமிருப்பதில்லை
வாடகை வாக்கியங்களைத் தவிர

உன் தோள் பற்றி
முகம் பார்த்து
பகிர்தல் என்பது
வாய்ப்பதேயில்லை

நாம் பரிமாற இயலாத
இதய விசும்பல்கள்
புகலிடம் தேடுகின்றன.

தூர தொலைவிருக்கும்
நண்பனுக்கு
குறுந்தகவல் அனுப்புகையில்
எதிர் வந்த நண்பனை
மறந்து விடுகிறோம்
பல சமயங்களில்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.