Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceTechnology
தொழில்நுட்பம்

பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?
மு.குருமூர்த்தி

Flowers வாயுநிலையில் உள்ள தாவர ஊக்கியான எத்திலீன் பழங்களை பழுக்கச்செய்கிறது; பூக்களை உதிரச்செய்கிறது. பழங்கள் மற்றும் பூக்களின் வாழும்காலத்தை விரைவுபடுத்தும் இந்த எத்திலீன் வாயு தாவரசெல்களில் அதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

தாவரங்களின் வாழ்க்கைப்பயணம் முழுவதும் எத்திலீன் வாயு உடன்செல்கிறது. தாவரநாற்றுகளின் ஒளிநாட்டம், புவிநாட்டம், வேர்நாட்டம் பண்புகளுக்கு எத்திலீன் காரணமாக இருக்கிறது. விதை முளைத்தலைத் தூண்டுகிறது; தடைகளைத்தாண்டி தாவரத்தை வளரச்செய்கிறது; வேர்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது; குறிப்பாக வேர்த்தூவிகளை வளரச்செய்கிறது; நைட்ரஜனை வேர்முண்டுகளில் நிலைப்படுத்தும் செயல்களில் துணைநிற்கிறது. ஒரு பழக்கூடையில் ஒர் அழுகிய பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயு அருகில் உள்ள பழங்கள் அழுகுவதை விரைவுபடுத்துகிறது. இதனால்தான் பழங்களையும் பூக்களையும் விற்பவர்கள் அன்றாடம் தரம்பிரித்து அழுகிப்போனவற்றை அகற்றிவிடுகின்றனர். அதேசமயம் நோய்க்கிருமிகளையும் பாதகமான சுற்றுச்சூழலையும் தாங்கிநிற்கும் வலிமையையும் இந்த எத்திலீன் வாயுதான் தாவரத்திற்கு அளிக்கிறது. அதிகப்படியான எத்திலீன் உற்பத்தி விளைபொருட்களில் நாசத்தை ஏற்படுத்துவதால் எத்திலீன் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.

தாவரங்களில் காணப்படும் EIN2 என்ற புரதம் எத்திலீனின் முயற்சிகளை முறியடிக்கவல்லது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. அழுகுதல் மற்றும் உதிர்தல் காரணமாக ஏற்படும் பயிர் இழப்பைக்குறைப்பதற்கு இந்த ஆய்வுகள் துணைசெய்கின்றன.

- தகவல்: மு.குருமூர்த்தி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com