விண்வெளி
சந்திரன் பெரிதாகத் தோன்றும் ஜனவரி 10ஆம்தேதி.
மு.குருமூர்த்தி
2009ம் ஆண்டில் உண்டாக இருக்கும் பெளர்ணமி நாட்களில் ஜனவரி 10ஆம் தேதி தோன்றும் சந்திரன் மட்டுமே மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு வெகு அருகில் வரும் நாள்தான் அந்த ஜனவரி 10ஆம் தேதி.
பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பாதை முழுமையான வட்டம் இல்லை. அது ஒரு நீள்வட்டப்பாதை. 2009 ஜனவரி 10ல் மட்டும் சந்திரன் 50,000 கிலோமீட்டர் பூமியை நெருங்கிவிடுகிறது.
2009 ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 357,000 கிலோமீட்டர்களாக இருக்கும். வழக்கத்தைவிட சந்திரன் 14% பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்பது வியப்பான செய்தி இல்லையா?
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|