Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruScienceSpace
விண்வெளி

யாரறிவார் இயற்கையை...
மு.குருமூர்த்தி

Galaxy கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர் தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது. கேலக்ஸிகளின் மையங்களில் அதிக அழுத்தமும், வெப்பமும், வாய்த்திரட்சியும் இருப்பதால் அங்கே புதிது புதிதாக விண்மீன்கள் தோன்றியபடி இருக்கும். கேலக்ஸியின் வெளிவிளிம்புகளில் பெரும்பாலும் குளிர்ந்துபோய் மரணமடைந்து கொண்டிருக்கும் விண்மீன்களே காணப்படும் என்பது பொதுவான நம்பிக்கை.

மையத்திலிருந்து சுமார் 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால், கேலக்ஸியின் மெல்லிய சாட்டைபோன்ற நீட்சிகளில் ஒன்றில் புதிதாக ஒரு சூரியன் பிறந்துகொண்டிருப்பது தெரிந்தது. தெற்கு கதிர்ச்சக்கர கேலக்ஸி (Southern pinwheel Galaxy) என்று அழைக்கப்படும் (M 83 என்பது அதன் விண்ணியல் பெயர்) ஒரு கேலக்ஸி இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரக்கூட்டம்.

M 83 ன் விட்டமே 40,000 ஒளி ஆண்டுகள்தான். இதன் மையத்திலிருந்து 140,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் புதிய விண்மீன் உதித்துக்கொண்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. 'இயற்கை இப்படித்தான்' யாராலும் உறுதியுடன் சொல்லமுடியாது போலிருக்கிறது.

கலைக்கதிர், ஜூலை 2008

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி


- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.