Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruScienceEarth
புவி அறிவியல்

வயதானால் மூளை மழுங்குமா?
மு.குருமூர்த்தி

brainpower வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.

வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.

ஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.

பெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.

இதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.

எப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.

இன்னும் படிக்க:(http://www.elements4health.com/heavy-drinkers-have-smaller-brains.html)

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.