Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruScienceEarth
புவி அறிவியல்

கால்நடைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவம்
மு.குருமூர்த்தி

Monkey கிழக்கத்திய நாடுகளில் கையாளப்பட்டுவரும் ஒரு மருத்துவமுறைதான் அக்குபங்சர். மிக நுண்ணிய ஊசிகளை உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் செலுத்தி வலியை மறக்கச்செய்யவும், சிகிச்சை அளிக்கவும் இந்த அக்குபங்சர் மருத்துவமுறை பயன்படுகிறது. இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பயன்பட்டுவந்த இந்த அக்குபங்சர் மருத்துவமுறை இப்போது கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் புதிய அறிவியல் செய்தி.

ஜிப்ஸி...இது ஒரு குதிரையின் பெயர். குதிகாலில் பீடித்த நோயால் அவதிப்பட்ட ஜிப்ஸியின் வலியை துரத்தியடித்து, எலும்புகளின் வலிமையைப்பெருக்கி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தது அக்குபங்சர் மருத்துவ முறை. பாரம்பரிய மருத்துவமுறையுடன் இணைந்துதான் இந்த சிகிச்சை செய்யப்பட்டது.

வர்ஜீனியா டெக் நகரத்திலுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறிய மற்றும் பெரிய மிருகங்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடைகளின் தோல் நோய்கள், தசை மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், நரம்புமண்டலம் சார்ந்த நோய்கள் இவற்றுக்கெல்லாம் அக்குபங்க்சர் சிகிச்சை பலனளிக்கிறது என்கிறார் இங்கு பணியாற்றும் டாக்டர் மார்க் கிரிஸ்மான். கடந்த பத்தாண்டுகளாக இந்த சிகிச்சைமுறையில் விற்பன்னராக இவர் இருக்கிறார்.

கால்நடைகளுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியும் சான்றிதழ்படிப்பும் கூட இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறதாம்.

பழமையான மருத்துவமுறைக்கு அக்குபங்சர் மருத்துவமுறை ஒரு மாற்று அல்ல. பழமையான ம்ருத்துவமுறையுடன் அக்குபங்க்சர் மருத்துவமுறை இணைந்து செயல்படுகிறது என்கிறார் டாக்டர் கிரிஸ்மான்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2008/07/080715071428.htm
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.