Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
புதினா புலவ்

தேவையான பொருட்கள்:

புதினா - 2 கட்டு (இலைகளை தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்)
புலவ் அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1 மூடி
வெங்காயம்(பெரியது) - 4
காய்கறிகள் : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர், பச்சைப்பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் தேவவயான அளவு

செய்முறை:

காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், புதினா ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

பிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினாவை போட்டு வதக்கி அதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து நீர் ஊற்றி வேகவிடவும்.

இந்தக் கலவை கொதித்ததும் அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். புலாவ் ரெடி.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.


Unable to connect to database! Please try again later.