 |
உருளை பாயாசம்
தேவையான பொருட்கள்:
உருளை - 1/4கிலோ
மில்க்மெயிட் - 4டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 200கிராம்
நெய் - 4டீஸ்பூன்
பால் - 1லிட்டர்
முந்திரி - 10
ஏலப்பொடி - 1பின்ச்
திராட்சை - 10
செய்முறை:
உருளையை தோல் உரித்து கேரட் சீவியால் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலை விட்டு நன்கு கிளற வேண்டும். சர்க்கரை சேர்த்து பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை கிளற வேண்டும். சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும்.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.
|
|
Unable to connect to database! Please try again later.
| |