Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
பாசிப்பருப்பு சாம்பார்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 200 கிராம்
உளுந்து - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2


செய்முறை:

பாசிப்பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கினையும் சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் அனைத்தையும் போட்டு வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பருப்பு மற்றும் அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.