Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:


பெரிய நெல்லிக்காய் - 10
எலுமிச்சம்பழம் - 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும். நெல்லிக்காய் சூடு ஆறியதும், உதிர்த்து கொட்டை நீக்க வேண்டும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்க வேண்டும். தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாற வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.