Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
பாவக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பாவக்காய் - கால் கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவடாம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
புளி - எழுமிச்சை அளவு
வெல்லம் - 2 சதுரகட்டிகள்

செய்முறை:

வெங்காயம், தக்காளி மற்றும் பாவக்காய் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போட வேண்டும். வெடித்ததும் கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிவக்கும் வரை வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள பாவக்காய் போட்டு பச்சை வாசம் போகும்வரை வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். புளியை கெட்டியாக கரைத்து அதி ஊற்ற வேண்டும். கொதி வந்ததும் வெல்லத்தை பொடி செய்து போட வேண்டும். காய்கறி வெந்து குழம்பு சுண்டியவுடன் இறக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.