Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
காலிஃப்ளவர் குருமா

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்: கால் கிலோ
மிளகாய் வற்றல்: 5
பெரிய வெங்காயம்: 1
சோம்பு: 1 தேக்கரண்டி
தேங்காய்: 2 சில்லு
எண்ணெய்: 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை: சிறிது
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை கழுவி, சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி சிறிது நீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். வெந்தவுடன், இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்க வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.