Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
தோசை சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

தோசைமாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய காய்கறிக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
துருவிய பனீர் - அரை கப்
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசை மாவை சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றி எண்ணைய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தோசையின் மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி சாண்ட்விச் போல் செய்து கொள்ளவும்.

இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், புரதச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.