Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
கேரட் சூப்

தேவையான பொருட்கள்:


கேரட் - 4
சின்ன வெங்காயம் - 10
பாசிப்பருப்பு - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பால் - 100 மில்லி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மைசூர் பருப்பு - 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

குக்கரில் ஆவி அடங்கியதும், வடிகட்டி, அரைத்து, பின்னர் மீண்டும் அதே வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவைச் சேர்த்து பரிமாற வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.