Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
மட்டன் ரசம்

தேவையான பொருட்கள்:

ஆட்டு எலும்பு - 250 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டுப் பல் - 4
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:

எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் வற்றல், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். எழும்புத் துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும். பின்பு அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.