Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
இறால் மீன் கறி

தேவையான பொருட்கள்:

இறால் மீன் - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
சின்ன வெங்காயம் - 25
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறால் மீனைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் சிவந்தவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விட வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால் மீன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.