Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
கோழி உருளைக் குழம்பு

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி: 750 கிராம்
உருளைக்கிழங்கு: 250 கிராம்
பெரிய வெங்காயம்: 3
கரம் மசாலாத்தூள்: 2 தேக்கரண்டி
பூண்டு: 6 பல்
கொத்தமல்லித்தழை: 3 மேசைக்கரண்டி
இஞ்சி: அரை அங்குலத்துண்டு
மிளகாய்த்தூள்: அரைத்தேக்கரண்டி
தக்காளி: 4
தயிர்: 2 கப்
மஞ்சள்தூள்: 2 தேக்கரண்டி
தண்ணீர்:2 கப்
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து, குளிர்ந்த பின், தோலினை உரித்து நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ள வேண்டும். நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் பாதியை எடுத்து உருளைக்கிழங்கிலும், கோழித் துண்டங்களின் மீதும் நன்கு தடவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.

ஒரு அலுமினிய பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடேறியதும் மீதி உள்ள கலவையை சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அதன் பிறகு நறுக்கின தக்காளியை சேர்த்து, தீயை சற்று அதிகப்படுத்தி நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு கோழித்துண்டங்களைச் சேர்த்துப் பிரட்டி சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிட வேண்டும். பிறகு இரண்டு கப் வெந்நீர் ஊற்றி வேகவிடவும். குழம்பு கொதித்தவுடன் அடுப்பின் தீயை சற்றுக் குறைத்து, மூடி வைத்து சிறிது நேரம் வேகவிட வேண்டும். கோழி வெந்து மிருதுவானவுடன் மசாலாவில் தோய்த்து வைத்துள்ள உருளைக்கிழங்குத் துண்டங்களைச் சேர்த்து, மெதுவாக கிளறி, தேவையெனில் மேலும் சிறிது சுடுநீர் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடங்களுக்கு வேகவிட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.