Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Non-Veg Recipe
சிக்கன் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
சிக்கன் - 1கப்
சீஸ் - 100 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடை மிளகாய் - சிறியது 1
மஞ்சள் - 2 மேஜைக்கரண்டி
சீரகம் பவுடர் – 2 மேஜைக்கரண்டி
மிளகு பவுடர் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு, மல்லி இலை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்க வேண்டும். சிக்கனை சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், மல்லி இலை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி,சிக்கன் ,மஞ்சள்,சீரகம்,மிளகு,உப்பு சிறிது போட்டு வெந்தவுடன், குடை மிளகாய் போட்டு கிளறி இறக்க வேண்டும்.

பேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா, வேக வைத்த சிக்கன், அதன் மேல் செடார் சீஸ் போட்டு அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். மல்லி இலை தூவினால் சிக்கன் பாஸ்தா ரெடி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com