Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
சிக்கன் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 400 கிராம்
முட்டை - ஒன்று
கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதனை நன்கு பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். வெங்காயத்தை தோலுரித்து மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டிக் கொள்ள வேண்டும். மீதமுள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கின இஞ்சி பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, ஸ்டாக், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும். அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.