 |
கோழிக்கறி தோசை
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டி விழுது - 2 தேக்கரண்டி
காரட் துருவல் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும். மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.
|
|
Unable to connect to database! Please try again later.
| |