Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              சங்கங்கள்

          சங்கங்களால் - நல்ல
          சங்கங்களால் - மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

          சிங்கங்கள் போல் - இளஞ்
          சிங்கங்கள் போல் - பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்த்திட லாலே

          பொங்கும் நிலா - ஒளி
          பொங்கும் நிலா - எனப்
பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை

          மங்கிடுமோ? - உள்ளம்
          மங்கிடுமோ? - என்றும்
மங்காது நல்லறி வும்தௌ¤ வும்வரும்

          சங்கங்களை - நல்ல
          சங்கங்களை - அந்தச்
சட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க!

          அங்கம் கொள்க! - அதில்
          அங்கம் கொள்க! - எனில்
அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட

          எங்கும் சொல்க! - கொள்கை
          எங்கும் சொல்க! - இதில்
ஏதுத டைவந்த போதிலும் அஞ்சற்க!

          தங்கத்தைப் போல்- கட்டித்
          தங்கத்தைப் போல் - மக்கள்
தங்களை எண்ணுக! சங்கங்களிற்சேர்க்க! தங்கத்தைப் போல்...

          கொள்கை இல்லார் - ஒரு
          கொள்கை இல்லார் - மக்கள்
கூட்டத்தில் இல்லை! சங்கங்களின் சார்பினைத்

          தள்ளுவதோ?-மக்கள்
          தள்ளுவதோ? - சங்கத்
தாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று

          விள்ளுவதோ? - மக்கள்
          விள்ளுவதோ? - மக்கள்
வெற்றியெல்லாம்சங்க மேன்மையிலேஉண்டு

          கொள்ளுகவே - வெறி
          கொள்ளுகவே - சங்கம்
கூட்டிடவும்கொள்கை நாட்டிடவும்வெறி கொள்ளுகவே.....

          சாதி மதம் - பல
          சாதி மதம் - தீய
சச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்

          போதத்தையே - மக்கள்
          போதத்தையே - அறப்
போக்கிடும் மூடவழக்கங்கள் யாவும்இல்

          லாத இடம் - தீதி
          லாத இடம் - நோக்கி
யேகிடுதேஇந்த வைய இலக்கியம்!

          ஆதலினால் - உண்மை
          ஆதலினால் - சங்கம்
அத்தனையும்அதை ஒத்து நடத்துக!

          உள்ளத்திலே - நல்ல
          உள்ளத்திலே - எழுந்
தூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல்

          வெள்ளத்திலே - இன்ப
          வெள்ளத்திலே - இந்த
மேதினி மக்கள் நலம்பெறுவாரென்று

          தள்ளத் தகாப் - பல
          தள்ளத் தகா - நல்ல
சங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்!

          பள்ளத்திலே - இருட்
          பள்ளத்திலே - வீழ்ந்த
பஞ்சை கட்கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும்
சங்கங்களால்.....

          தாய் தந்தையர் - நல்ல
          தாய் தந்தையர் - மண்ணில்
தாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற

          நேயத்தினால் - மிக்க
          நேயத்தினால் - நித்தம்
நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக!

          ஆய பொருள் - உண்
          டாய பொருள் - முற்றும்
அங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே

          தூய எண்ணம் - மிகு
          தூய எண்ணம் - இங்குத்
தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com