Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              இறந்தவன் மேற் பழி


அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே!
- இளம்பிடியே! பூங்கொடியே!
சிந்தை ஒன்றாகி நாம் இன்பத்தின்            எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத்           தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற்           கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதை -இன்றே -
குணக்குன்றே! - கேள்நன்றே!           (அந்நிய)
கடும்பிணி யாளன்நான் இறந்தபின்,            மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன்            மீதே.
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத்            தாதே!

ஆசைக் குரியவனை நாடு -மகிழ்வோடு - தார்சூடு
                    நலம்தேடு! (அந்நிய)
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந்           தால்
கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி           மேல்!
சொற் கண்டு மலைக்காதே உன் பகுத்           தறிவால்
தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர் கடப்பாய் -
துணை பிடிப்பாய் - பயம் விடுப்பாய்.           (அந்நிய)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.