Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

15. பாட்டாளிகளின் சர்வாதிகாரம் தவிர்க்க முடியாததா?

Ambedkar

புத்தர், காரல் மார்க்ஸ் தத்துவங்களை ஒப்பிடுவதற்கு முன்பு, காரல் மார்க்சின் தத்துவங்கள், எப்படி இவ்வளவு காலம் தாக்குப்பிடித்தன என்பதை நாம் கணக்கிட வேண்டும். வரலாறு, மார்க்சின் கருத்துகளை எவ்வளவு தூரம் மறுதலித்துள்ளது என்பதையும், மார்க்சின் எதிர்ப்பாளர்கள், மார்க்சின் தத்துவத்தை எந்தளவுக்குச் சிதைத்துள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்சிய தத்துவங்கள் 19ஆம் நூற்றாண்டின் இடையில் உருவாக்கப்பட்டவையாகும். தொடக்கம் முதல் இன்று வரை இத்தத்துவங்கள் மிகுந்த விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. இவ்விமர்சனங்களால், காரல் மார்க்சின் தத்துவத்தளங்கள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டன. மார்க்சின் தத்துவமான, ‘மார்க்சின் சமூக அமைப்பு' தவிர்க்க முடியாதது என்பது முழுமையாக நிராகரிக்கப்பட்டது.

மார்க்ஸ் தன்னுடைய ‘மூலதனம்' என்ற நூலை வெளியிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 1917இல் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் உருவாக்கப்பட்டது. கம்யூனிசம் என்ற பாட்டாளிகளின் சர்வாதிகாரம் ரஷ்யாவில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மார்க்ஸ் கணித்தபடி, ‘தவிர்க்க இயலாத' ஒன்றாக மனித முயற்சிகளின்றி அது உருவாக்கப்படவில்லை. அங்கு, அதாவது ரஷ்யாவில் புரட்சி உருவாக்கப்பட்டது; தேர்ந்த திட்டமிடுதலோடு அப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. அப்புரட்சி பல வன்முறைகளையும், ரத்த சேதத்தையும் உள்ளடக்கியே ரஷ்யாவில் அடியெடுத்து வைத்தது.

உலகின் பிற நாடுகள், ‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்' தங்கள் நாடுகளுக்கும் வரும் என இன்றுவரை காத்துக் கிடக்கின்றனர். மார்க்சிய தத்துவங்களின் சமத்துவம் தவிர்க்க முடியாதது என்பது போன்ற பல தளங்கள் நடைமுறையிலும், தர்க்க ரீதியிலும் தவறானது என நிரூபிக்கப்பட்டன. வரலாறு என்பது, பொருளாதார விளக்கமான பொருள் முதல்வாதத்தை ஆதாரமாகக் கொண்டது என்பதை யாரும் இன்று ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
(பாட்டாளிகளின்) சர்வாதிகாரம் மெல்ல மெல்லப் பரவி நிலைக்கும் என்பதை இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை. இதைப் போலவே, மார்க்சின் பிற தத்துவங்களும் ஆதாரமற்று நடைமுறையிலிருந்து வெகுவாக விலகிப் போய்க் கொண்டிருக்கின்றன.

மார்க்சின் கொள்கைத் தீயின் எஞ்சிய பகுதிதான் இன்றுள்ளது. இது, எஞ்சிய பகுதியாக இருப்பினும், மிகுந்த முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இன்று மீதமுள்ளவற்றை நான்காக நான் காண்கிறேன்.

1. தத்துவங்கள் கடமைகள் என்பது, இந்த உலகை மறு கட்டுமானம் செய்வதாக இருத்தல் வேண்டும். மாறாக, உலகின் தொடக்கம் பற்றி விவாதித்துக் கொண்டு நேரத்தை விரயம் செய்தல் கூடாது.

2. வர்க்கங்களுக்கிடையே தேவையின் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது.

3. தனிநபர் சொத்துடைமை ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் அதிகாரத்தையும், பிற வர்க்கத்தினருக்கு சோகத்தையும், சுரண்டலையும் பரிசாக அளிக்கிறது.

4. எனவே, இத்துயர் நீக்கப்பட வேண்டும். இது, தனிநபர் சொத்துடைமையை அழிப்பதால் மட்டுமே சாத்தியம். எனவே, இதுவே நற் சமூகத்திற்கான வழியாகும்.

இனி புத்தருக்கும் காரல் மார்க்சுக்கும் இடையிலான ஒப்பீட்டைக் காணலாம்: மேற்சொன்ன நான்கு தத்துவங்களில், முதலானதில் புத்தருக்கும் காரல் மார்க்சுக்கும் முழு உடன்பாடு உள்ளது. இதை விளக்குவதற்கு புத்தருக்கும், போத்த பாதர் என்ற பார்ப்பனருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலை மேற்கோள் தருகிறேன். போத்த பாதர், புத்தரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறார்.

1. இந்த உலகம் அழிவற்றதா?
2. இந்த உலகம் முழுமையானதா?
3. இந்த உலகம் முடிவற்றதா?
4. ‘ஆத்மா' உடலைப் போன்றதா?
5. இந்த உடலும், ஆத்மாவும் வெவ்வேறானதா?
6. உண்மையை உணர்ந்தவன் மரணத்திற்குப் பின்பும் வாழ்கிறானா?
7. மரணத்திற்குப் பிறகு மீண்டும் வாழ்கிறானா? அல்லது மீண்டும் வாழ்வதில்லையா?

இந்த வினாக்களுக்குப் புத்தர் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

தொடரும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com