Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜூலை 2006
பெருந்தேவி கவிதைகள்

சபை

அவரவரிடமிருந்து
ஒரு ஆகச்சிறந்த என்னை
எடுத்து விரியுங்கள் மேசை மீது.
இசைந்த எண்களின் ஆட்டம்
ஜோராய் நடக்கட்டும்.

பலாபலன்

பட்சிகளோ பறிப்பவரோ
இல்லாத இடத்தில்
கனிகளுக்கென்ன வேலையென்று
மறுகுவதற்கில்லை
அர்த்தம் கைதாவிப்
பறிக்க ஏலாத
பேரதிக ஒளியைத்
தம் இரைப்பைகளில் இட்ட சொற்கள்
அவற்றிடமிருந்தே பெற்றன.

கருணை கொண்டொழுகு

மறதியெனும் நெடுங்கணக்கில்
கூடக் குறையக்
காத்துக்கொண்டிருக்கும்போது
மூன்று இலைகள் முதலில்விட்டு
கணக்கின்றி மூடிவிட்ட சிறுபரப்பு
ததும்ப
பொரிகள் இறைக்க வேண்டாம்.
கவனம்,
கொட்டும் மழையில்
அருங்கலைப் பொருட்களின்
பழங்கடைப்
பெயரும் ஒருத்தியின் பின்னே
கரைந்தோடிக்கொண்டே அழைக்கும்போது
வசதியற்றிருக்கிறேன்
என்று
தன்பால் இரக்கமுற்றும்
அவள் கைவிரித்துவிட வேண்டும்.

பூ வேர் ஆய்வு

ஒரு வயலட் பூ
உன் என் கண் திருஷ்டியைக்
கழிக்குமென்று
பறிக்கச் செல்கின்றனர்
காதலர் ஆண் பெண்.

காதலின் முதல் கோப்பை நிறைய
அம்மலர்களே உருகி வார்க்கின்றன
என்று
தேனாடித் திளைக்கும்
அவர்கள்
அறிவிக்கின்றனர் தம்மை
பெண் பெண் என்றும்
குடும்பப்பேழையில்
இன்பக்கொட்டு முழக்குகிறது
ஒரு கௌளி.
எம்மனச்சமாதானங்களில்
அவரவர் கற்பனைக்கென்றே
பூத்து மணக்கின்றன
வெவ்வேறு
வயலட்கள் போன்றவை.
கடவுளரை தேவதைகளைப் போலும்
வயலட்களை
வேறென்ன வளர்க்கும்
கண்ணீரே அல்லது குருதியேயன்றி?
மல்கும் போராளிகள் எங்கும்
முளைபாரிக்க
வயலட்களைச் சுற்றியும்.
உண்மையில் உள்ளனவா அவை
என்று கேட்ட கற்றறிவாளன்
மறதிக்குச் சபிக்கப்பட்டான்.
மறைந்து போனது பின்னர் தான்
என்று முணுமுணுத்த இன்னொருத்தி
தன்னைத் தத்தம் கொடுத்துவிட்டாள்
அவற்றின் தத்துவத்துக்கு.
யாத்ரீகர்களோ
வயலட்களைப் பறிக்கச் செல்லும்
காதலர்பின் நகர்கிறார்கள்
அவர்களைக் காதலிக்கிறார்கள்
அவர்களின் நோட்டுப்புத்தகங்களில்
பூரேகை
தன்னைச் சிறிதுசிறிதாக வரைந்தவண்ணம்
'வயலட் யானையின் நிறம்'
என்றெழுதிவைக்கப்பட்ட
காலக்குறிப்பைத்
தின்று
தன்னைப்படர்கிறது.

ஆம், வயலட் நிஜ மலரல்லவா நம் தோட்டத்தில்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP