அ. செல்வதரன் கவிதைகள்
சமீபமாய் ஒருநாள்
பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன்
பரணில் ஒரு புகைப்பட தொகுதி..
பாட்டி சொன்னாள்:
அதில் ஒரு குழந்தையை காட்டி.
"இது நீ இரண்டு வயசுல...
இது பள்ளிக்கூடம் போகையில...."
பக்கங்களைப் புரட்டி புரட்டி
சொன்னாள் இது...
"இது போன வருசம்...
நீ அனுப்புனது..."
எல்லாம் பார்த்தேன்
இதில் எது எனது வடிவம்
0 0 0
பகவத்கீதை
திருக்குரான்
பைபிள்
ஒன்றாக இருக்கிறது
என்
புத்தக அலமாரியில்
0 0 0
அறுந்துபோன
ஒற்றைக்கால்
செருப்புகூட
உசத்தி தான்
முருங்கை மரத்தில்
தொங்கும்போது.
0 0 0
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|