சுயபரிதாபம்
- சிற்றார் பழ. தேவராஜன்
மெளனமாய் கடந்து செல்லும்
காலத்தின் கதவிடுக்கில் நசுங்கி
பிசுபிசுக்கும், தங்கிவிட்ட
ரகசியங்கள் - இன்று
ரம்பமாய் கதறக்கதற
அறுக்கும்போது - யாரும்
அறியாமல் விம்மிப்புடைத்து
விசும்பலை அடக்கி - மீறியும்
கரைகடந்து கண்ணோரம்
வழியும் ஒரு துளி கண்ணீரில்
யுகங்களைக் கடந்த - எதனாலும்
விளக்க முடியாத விமர்சிக்க இயலாத
ஒரு இன்பம், வேதனை
காதோரம் இறங்கி ரகசியம்
சொல்லி, கன்னத்தில் வழியும்போது
உயிரற்று, லஜ்ஜையின்றி துடைக்கும்போது
குபுக்கென்று ஒரு உணர்வு
அறுந்து தெறிக்குமே - அப்போது
இழப்பேன் 'என்னை' என்னுள்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|