Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

சரணாலயம்
ராபிசா

தவமாய்
தவமிருந்தாள் பிள்ளைக்காக...
பிள்ளை பிறந்தான், சித்திரையில்...

விசிறியில்லா குடிசை
வீட்டில்
துகில்கொள்ள மறுத்தவனுக்கு,
வேம்பின் மூலிகைக் காற்றிலே
வேதப்பாடல்கள் பாடி
தாலாட்டினாள் - தன்
முந்தானித் தொட்டிலில்.

முட்டிப் போட்டு தவழும்போது
முகங்குப்பிற விழுந்தவனை
முன்சிந்தனையின்றி அணைத்தவள்.

முந்தானித் தொட்டிலின்
மூத்திரம் காயும் முன்
துப்பட்டாவோடு, அவன்
துகில் களைத்து
தூக்கிச் சென்றாள் - அவன்
துணைவி.

பசிக்காய் அழுதபோது
பாலூட்டிய மார்பின்
மடுக்களிலோ
இரத்தம் கசிகிறது!!.

ஒரு முந்தானையும்
தெருவில் காய்கிறது
மூத்திரத்தால்...

முந்தானை யிழந்தவளோ! சரணடைந்தாள்
முதியோர் இல்லத்தில்.
மதியிழந்த மங்கைகள்
கடைவீதியில்
காட்சி பொருளாய் அலைவதுபோல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.