ஒரு நிமிட நிழல் மேகம்
ம. அருணாதேவி
மேகம்
என்னைக் கடந்து போகிறது
ஒரு நிமிடம் நிழல் தந்தது அது.
நிழலில் மழை இருந்தது
தூறல் குளிர்வித்தது.
வெள்ளமாய் பெருகிற்று மகிழ்ச்சி
ஒரு நிமிட நிழல்தான்.
குடைபிடிக்கும் நிழலுக்கு பதிலாய்
நிமிட நிழல்
வார இறுதி நாளோ
விடுமுறை தினமோ
வந்து போவதும்
ஒரு நிமிட நிழல் மேகம் போல.
உடம்பைச் சாய்த்து
உறக்கம் தடுவிக்க கூட போதுமானதாயில்லை.
துணி துவைக்கும் கல்லின் மேல்
ஒரு துண்டு சோப்பு மிச்சமிருக்கிறது.
என் வேலைகளை
நிரந்தரமாய் நினைவூட்டி.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|