Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

எங்கள் மலை
அ. செல்வதரன்


முகத்தோடு
முகம் உரசும்
முகில் கூட்டங்கள்

மலையோடு
போட்டியிடும்
மரங்கள்

கண்களில் நுழைந்து
காதின் வழி
வெளிவரும் தென்றல்

உண்டது செரிக்க
உரக்கக் கூவும்
கருங்காக்கைகள்

நீரென நினைத்து
கள் உண்டு
களி நடனமாடும்
மலையோர மந்தியெல்லாம்
சிந்தியல் வெண்பா போல்
சீட்டி அடித்தபடி கழியால்
சிலம்பம் ஆடும்.

பழுத்த மாங்கனிபாதியுண்டு
எஞ்சியதை
நம்மேல் எறியும்
குரங்குக்கூட்டங்கள்.

மார்பு வரை
பாவாடை கட்டி
மங்கை ஒருத்தி
நிற்பது போல்
பச்சைப் பாவடை அணிந்த
பசும்பாறைகள்

தேவர்கள்
கடைந்தெடுத்த அமிழ்தம்
பூமி வெடித்து
வெளி வருதல்போல்
வற்றாத
நீர் ஊற்றுக்கள்

கரிசல் மலை என
மலைக்க வைத்திடும்
கருப்பு நிற களிறுகள்
கொண்டமலை
எங்கள் மலை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com