முதுகுக்கு பின் உலகு
நேசன்
இப்போதெல்லாம்
முதுகைப் பற்றியே யோசிக்கிறேன்
முதுகுக்குப் பின்னால்
நம்மை துரத்தும் ஓர் உலகம்
நம்மால் மறைக்க இயலாத முதுகு
அடுத்தவர் கைகளில்
சிக்கிக் கொள்கிறது
அவர்கள் வீசியெறியும்
கூரான வார்த்தைகள்
நினைவுத் தடங்களில் தட்டுபடும்
ரணப் பிசிறுகள்
அவர்களின் துப்பலை
கிளரி நுகர்ந்து பார்க்கும் மனம்
சிந்தனையும் எல்லாமும்
பின்னோக்கியே நகர்கிறது.
முன்னோக்கிய இயக்கங்கள்
எல்லாம் தடைபட்டுபோனது
வாழ்வில் விந்தைகளை
காணவில்லை
இப்போதுதான் புரிகிறது
எல்லோருக்கும் ஓர் முதுகுண்டு
முதுகுக்கு பின்னால்
ஓர் உலகுண்டு.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|