பதில் சொல் காற்றே...
டி. லூமா பெர்னட்
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
சிலிர்க்க வைக்குது
உன் ஸ்பரிஸம்...
தேகமெங்கும் குளிரூட்டி
சில்லிட வைக்குது
உன் தழுவல்
என்மேல் வீசும் - உன்
குளிர் மூச்சுக் காற்று
இன்பக் கவியெழுத
எனைத் தூண்டுதே
சாய்ந்து வந்து முத்தமிட்டு
எனை சந்தோஷிப்பிக்கும் நீ
சந்தியில் சிலரை
நிறுத்துவதும் ஏனோ?
உனை நினைத்து
தவிக்கும் போது வராமல் - நீ
விரும்பும் நேரம் வந்து - எனை
இம்சை படுத்துவதும் ஏனோ?
மின்னலடிக்கும் பார்வையால்
இடியிடிக்கும் வார்த்தையால்
அடாவடியாய் வந்து
நீ எனைப்
பயப்படுத்துவதும் ஏனோ?
நீ இல்லாமல்
என்னால் வாழமுடியாது
என்ற மமதையினாலா?
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|