Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

ஈராக் தீராத சோகம்


பாக்தாத்தில் இருந்து பேசிய அமெரிக்கத் தளபதி அறிவித்தார்: ‘ஈராக் எதிர்கொண்டிருக்கும் பற்பல சவால்கள் இங்கு இருக்கும்போது, அங்கு ஒவ்வொரு வரும் ஓராண்டிலோ, இரண்டாண்டிலோ கூட அனைத்திற்கும் தீர்வு காணப்பட முடியாது. உண்மையில், எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் வரலாற்றளவில் குறைந்தது ஒன்பது பத்து ஆண்டுகள் கூட பிடிக்கலாம்'.

படை விரிவாக்கத்தின் முதல் ஐந்து மாதங்களில், வன்முறை குறைக்கப்படும் என்று கூறிய இலக்கில் அமெரிக்க இராணுவம் வெற்றி அடைந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை; அதேபோல் அமெரிக்க எதிர்ப்பை அடக்குதல் என்ற அதன் மையப் பணி பற்றியும் அறிகுறி ஏதும் இல்லை.

அண்மையில் பென்டகன் அனுப்பிய காலாண்டு அறிக்கை ஒன்று உண்மையில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட பின் ஈராக்கில் வன்முறை பெருகியதாகத்தான் தெரிவிக்கிறது.

இன்று வரை அமெரிக்க படைகளின் மொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 3,524 என்று உயர்ந்துள்ளது. இதற்கிடையில், பென்டகன் கொடுத்துள்ள எண்ணிக்கையின்படி, ஈராக்கியர்கள் இதே காலத்தில் நாள் ஒன்றிற்கு 100 என்று மடிந்துள்ளனர்; இந்த எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் படுகொலையில் மிகக் குறைந்த மதிப்பீடு எனலாம்.

அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கிய கைப்பாவை சக்திகளும் ஈராக்கிய தலைநகரத்தில் 40 சதவிகிதத்தைத்தான் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் என்று ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ரேமண்ட் ஒடீமோ, ஒப்புக் கொண்டுள்ளார். ஐயத்திற்கு இடமின்றி இதுவே இருக்கும் நிலை பற்றி மிக நம்பகத்தன்மையான மதிப்பீடு ஆகும்.

அங்கு பெரும்பாலான மக்கள் நான்கு ஆண்டுகளாக நீடித்துவரும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்மையில் சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று 90 சதவிகித்திற்கும் மேலான சன்னி மக்கள் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று விரும்புவதாக காட்டியுள்ளது.

இன்னும் பல ஆண்டுகளுக்கு ஈராக்கின்மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடரும் என்றும் இன்னும் பல ஆயிரக்கணக்கான ஈராக்கியர்களும் அமெரிக்கத் துருப்புக்களும் கொல்லப்படுவர் என்ற நிலையே இப்போது இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com