Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஜூலை 2007

சூட்சுமம்
பழ. தேவராஜன்


எனக்குப் புரியாத - ஆனால்
தெரிந்த ஒன்றை லாவகமாக
லயத்துடன் அபிநயித்து
அடிமனதின் ஆதங்கத்தை
மயிலிறகால் தடவி

எனக்குள் எதையோ தகர்த்து
கல்லுக்குள் கசியும் நீராய்
ஏக்கத்தின் எச்சத்தில் - விழியோரம்
வழியும் நீரில் - இந்த

பிரபஞ்சத்தின் எந்த வார்த்தைக்கும்
வசப்படாத ஒன்றை - எனக்குள்
ரகசியமாய் பிளந்து, பிழிந்து
பிதற்றச் செய்தாயே!? - பிரமாதம்

எத்துணை சுமைகளை
இறக்கி வைத்தாய்
எத்துணை மனங்களை
லயிக்கச் செய்தாய்

ரசனைகளின் ரகசியத்தை - நின்
அசைவுகளும், அடவுகளும்
மனதின் அடி ஆழத்தில் நினைவுகளுக்கும்
புலப்படாத ஒன்றை சற்றே

சலனத்துடன் கடந்த பின்னும்
இறக்கி வைக்க முடியாத - ஒரு
இனம் புரியாத சுமை, சுகமாய்
கரைந்து, கரைந்து

கவலைகளாய், திவலைகளாய்
விழியோரம் வழியும்போது
ஒரு ரௌத்திரம், ஆங்காரம்
அசைவுகளுக்குள் அகப்படாமல்
ஆனந்தமாய் பிரிகிறதே! எப்படி?!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP