Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

வலுக்கும் எதிர்ப்புக் குரல் புதிய வடிவம் பெறும் நர்மதை போராட்டம்

நர்மதை நதி மீது கட்டப்பட்ட அணைகளால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய மறுவாழ்வுப் பணிகள் அடிப்படை நிலையில்கூட நடைபெறவில்லை. அத்துடன், மக்களின் உரிமைகளை மதித்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகளையும் மத்தியப் பிரதேச அரசு தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. இந்த மனித உரிமை மீறல் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் என்று மாநில எல்லைகளைக் கடந்து தொடருகிறது. மறுபக்கம் அந்த மக்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1. மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதி பாயும் பகுதிகளில் இந்திர சாகர், ஓம்காரேஸ்வர் ஆகிய இரு பெரும் அணைகளால் வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்டத் தலைநகரான காந்த்வாவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே அமர்ந்து தர்ணா போராட்டம், 5 பேர் பங்கேற்கும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூன் 6ம் தேதி தொடங்கினர். தர்ணாவில் பங்கேற்ற மக்கள்.

2.ஓம்காரேஸ்வர் அணையில் நீர்மட்டம் உயரஉயர குஞ்சாரி கிராமம் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்த கிராமத்தை விட்டு அகலாமல், கிராமத்தினர் தண்ணீரில் நின்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மூழ்கும் வீட்டைவிட்டு அகலாத ஒருவர்.

3. குஞ்சாரி கிராமத்தை விட்டு அகலாமல், தண்ணீரில் நின்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட ராம்குமார் மற்றும் கிராமப் பெண்கள். மாநில அரசின் சமரசத் திட்டத்தை அடுத்து 9 நாட்களுக்குப் பின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

4. தர்ணா, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தின் 21வது நாளில் (ஜூன் 26ம் தேதி) போராட்டத்தை நிறுத்தும் எண்ணத்துடன் வந்த காவல்துறையினர் நடத்திய தடியடியில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமைதியாக நடந்துகொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது 150க்கும் மேற்பட்ட போலீசார் அடக்குமுறையைக் கையாண்டனர்.

5. மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதி பாயும் பகுதிகளில் இந்திர சாகர், ஓம்காரேஸ்வர் ஆகிய இரு பெரும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. மாநில அரசும், நர்மதை நீர்மின்திட்ட வளர்ச்சி கழகம் (என்.ஹெச்.டி.சி.) ஆகியவை மக்கள் உரிமைகளையும், கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வெளியேற்றப்பட்ட கிராம மக்கள் 12 ஆயிரம் பேர், மாவட்டத் தலைநகரான காந்த்வாவில் ஜூன் 4ம் தேதி மாபெரும் பேரணி-ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com