புரிதல்
சிற்றார். பழ. தேவராஜன்
இரவுகளை தின்று தீர்த்தது
ஏக்கத்தின் மிச்சங்கள்
கனவுகளில் விழுந்து தொலைந்து
அன்றாட தேடலின் ஆதங்கங்கள்
இரவிற்கும், நித்திரைக்கும் இடையேயான
ஒப்பந்தம் - சபலங்களாய் நீண்டு வளைந்தபோது
பால்காரனின் குரலோசை தட்டி
எழுப்பியது - இப்படி
கனவுகளுக்கும், கவலைக்கும் காவு
கொடுத்த - என் நிம்மதியும், தூக்கமும்
பிறிதொரு சாமத்திற்கு பயந்து
உறக்கமின்றி தவிக்கும் என்னை
'ராக்கோழி' என்கிறார்கள் - ரகசியம்
அறியாத ரசிகமகா ஜனங்கள்
அவனவனுக்குத்தான் தெரியும்
அரிப்பும், சொரிதலின் சுகமும்...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|