Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

அசுரனிடம் கேளுங்கள்


1. இந்த உலகிலேயே மிக அன்பானவர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
- சதீஷ், நாகர்கோவில்

இப்போதைய நிலைவில் அதற்கென ஒரு போட்டி வைத்தால் அதில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக சிறீலங்கா அதிபர் இராஜபக்ஷேவாகத்தான் இருப்பார்.

திகைக்காதீர்கள்! சிறீலங்காவில் தெருவில் திரியும் நாய்களைக் கொல்லக்கூடாது என்று ஆணையிட்டுள்ளார். என்ன அன்பு பார்த்தீர்களா? (என்ன, நாயினுங் கேடான தமிழர் நிலையை மட்டும் மறந்துவிடுங்கள்).

2. ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க ஒரு தொழிற்சாலை அமைப்பது தவறா?
- ஆசாத், குளச்சல்.

தாத்தாவும் பாட்டாவும் ஒப்பந்தம் போட்ட டைட்டானியம் ஆலை பற்றித்தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். 'பிக்பாக்கட்' திருடனை சமாளிக்க சம்பல் கொள்ளையனை அழைத்து வருவது எப்படி சரி? ஆயிரம் பேருக்கு வேலை சரி: 20,000 பேருக்கு வாழ்வு பறிபோகிறதே?

3. டாக்டர்கள் கூட பயங்கரவாதிகளாக ஆகிவிட்டார்களே?
- ராம், நெல்லை.

நீங்களும் அந்த மாயையில்தான் இருக்கிறீர்களா?

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். இப்போது, அது அமெரிக்காவுக்கும் மிகப்பொருந்தும். முன்பெல்லாம் யாரையாவது கைது செய்யவேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் என்பார்கள். இப்போது யாரேனும் ஒருவர் இசுலாமியராகவோ, கறுப்பு அல்லது பழுப்பராகவோ இருந்தாலே போதும் என்றாகிவிட்டது.

மருத்துவர் கையில் ஊசியை எடுக்கவேண்டுமா அல்லது துப்பாக்கியை தூக்கவேண்டுமா என்பதை சமூகச் சூழல்தான் தீர்மானிக்கிறது.

'தன்வினை தன்னைச் சுடும்' என்பதை அமெரிக்கா மறக்கக்கூடாது.

4. என்னங்க 'சிவாஜி' ய பற்றி நீங்க எதுவுமே எழுதலியே?
- ஆல்பர்ட், கோவை.

அதைப்பற்றியும் எழுத வேண்டியதாகிவிட்டதா? நான் தப்பிவிட்டதாக அல்லவா நினைத்தேன். கறுப்புப்பணத்தை தேடி சிவாஜி தொடர்புடையவர்களின் வீடுகளில் ரசிக மகா ஜனங்கள் புகுந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம்கூட முன்யோசனை இல்லாமல் எப்படி இப்படியொரு படத்தை எடுத்தார்களோ?

5. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னும் பொதுப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போர் குறைந்து வருகிறார்களே?
- சங்கர், விழுப்புரம்.

ஆகஸ்ட் 15 - க்கு மிட்டாய் வேணும்ணா நேரடியா கேளுங்க. அத உட்டுப்புட்டு...?!
ஆமா, மக்களுக்காக கொடுக்கப்படும் குரல்களுக்கும் மக்கள் குரல்களுக்கும் இங்கு என்ன மதிப்பு இருக்கிறது?

சென்னையில் மருத்துவமனை கட்ட கோரி சுவரெழுத்து பிரச்சாரம் செய்த மக்கள் எழுச்சி இயக்கத்தோழர் நேயனுக்கு கிடைத்தது கைதும் 2 நாள் சிறைவாசமும்.

ஆண்டிப்பட்டிக்கு அருகே போதிய ஆசிரியர்கள் வேண்டும் என்று போராடிய பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது போலீசின் தடியடி. 10 மாணவர்கள் தேனி மருத்துவமனையில் அனுமதி. கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகவும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கு எதிராகவும் பல்லாயிரம் பேர் திரண்டும் பலனில்லை.
நீங்கள் கேட்பது என்னடாவென்றால்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com