Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
முல்லா கதைகள்

தமிழில்: ஷஃபி

கர்ப்பிணிப் பானை

ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார் முல்லா.

பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச் சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.

அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை திருப்பிக் கேட்டார் அவர்.

“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை மகப்பேறின் போது மரித்து விட்டது’, என்றார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய். பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.

‘நண்பரே! பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறதே’ குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு போஜித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.


மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

அதிர்ஷ்டமான மனிதன்

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.

காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.

‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com