Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005

ஆயுதச்சாலை
யவனிகா ஸ்ரீராம்

ஆயுதங்களை ஏற்றிச்செல்லும்
வாகனங்களுக்கான சாலைகளின் வரைபடத்தை
கணக்கிட முயல்வது சவாலான ஒன்று
பெரும்மீன் ஒன்று கரையில் இறந்துகிடக்கும் போது
அதை ஒருவர் அறிவது சுலபம் என்றாலும்
தற்கொலைகளுக்கான அந்தசாலை
ஒரு மனிதனின் வாயிலிருந்தே தொடங்குகிறது
நடுமுதுகுத்தண்டில் இறங்கி புட்டத்தில்
எகிறிக்குதிக்கிறது ஒரு பீரங்கி வாகனம்
கீழ்த்திசையின் சாலைகளில் ஒய்வெடுக்கும்
அவ்வாகனங்களில் இருந்து சிலசமயம்
உணவு பொட்டலங்கள் இலவசமாக கிடைப்பதை
உயிரற்றவர்கள் உண்ண மறுப்பதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
நீங்கள் வரைபடத்தை தெளிவாகப் பாருங்கள்
அழகிய சாலைகளின் குறிப்பல்ல அது
புனித ஆலயங்களுக்குப் போகும் நடைபாதையும் கிடையாது
திரும்ப முடியாமல் முதுகில்
அழுந்தும் துப்பாக்கியுடன் நீங்கள் நடக்கும் சாலை
பெண்களின் யோனியை குகையாய்ப் பாவித்து
சீறிச்சென்று மறையும் ஆயுதங்களின் சாலை
குழந்தைகளின் கோட்டுச் சித்திரத்தில்
அல்லது கிறுக்கல்களில் இருக்கிறது
அதன் உண்மையான வரைபடம்
பறவைகள் விலங்குகள் தாவரங்களுக்கிடையே
வானத்திலும் கடலுக்குள்ளும்
ஒரு வரைபடத்தை தொடர்ந்து செல்வது எத்தனை சிரமம்
எழுதுபவன் கைகளின் மேலும்
கேள்வி கேட்பவனின் கால்களின் மேலும்
நசுக்கிச் செல்லும் அவ்வாகனம்
ஒரு குடும்பஸ்தனை தன்முன்னால் நிறுத்தி
நடுங்கிச் சிறுநீர் கழிக்க வைக்கிறது
அச்சாலையின் வரைபடத்தில்
உங்கள் வாசற்படியை மட்டும்
நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.