Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005

சாளரத்தின் வலி
கா.சாகுல்

மூடிவிடுங்கள் சாளரத்தை
கட்டிய வீட்டுக்குள்
குருவி வந்து கூடுகட்டும்.
கட்டட்டுமே.
குருவியின் அழகைத்
தினமும் ரசிக்கும்
பாக்கியம் தானே.

அடைக்கலம் தேடிக்
கட்டிய கூட்டுக்குள்
முதலில் முட்டைகள். . .
அடுத்துக் குஞ்சுகள். . .
அடிக்கடி வாய்பிளக்கும்
இரைக்காக. . .

தாய்க் குருவிக்குத் தெரியுமா?
மின்விசிறி ஓடாத நேரத்தில்
உள்ளே வர வேண்டுமென்று
‘விருட்’டென்று ஒரு சத்தம்
அநாதைகளாய். . .
அத்தனை குஞ்சுகளும்
மூடிவிட்டேன் சாளரத்தை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.