Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005

தீத்திருவிழா
சரவணன் 1978

கார்த்திகை மாலைப்பொழுதில் வீடுதோறும்
சின்னஞ்சிறிய தீப்பந்தங்கள்.
விடியலில் பூக்கவுள்ள தீமொட்டுக்கள் போல
வீட்டிற்குள்ளிருந்து வீதிவரை
எண்ணெய்ப்புகை மணக்க
அலைஅலையாய் அசைந்தபடி.
கிளியாஞ்சட்டிகளைக் கண்காணிக்கவும்,
மங்கும் ஒளியைத் தூண்டிவிடவும்,
பிற தீக்கோலங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்
பொன்னகைசூடி புன்னகை சிதற
அவ்வப்போது வெளியே வருகின்றனர்
புத்தாடை தேவதைகள்.

நடை வேகத்தில் காற்றடித்து அணையாமலும்,
தீ நாவில்பட்டுப் புத்தாடை கருகாமலும்
மெல்லடி வைத்து மிதப்பதுபோல நடந்து
என் தீத்தோட்ட வீட்டினுள் நுழைந்தேன்.
தீபங்கள் நடுவில் நான். என் பிம்பம்
சுவர்களில் பூதாகரமாக வளர்ந்து
அலைந்து வளைந்து நிகழ்த்துகிறது
நான் ரசிக்க ஒரு நிழல் நடனம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.