Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005

முகம்
ரிச்சர்ட்ஸ் பிரிட்டோ

அறைவதுபோல் அடித்த காற்றிலும்
சுழன்று விழவில்லை
என் முகமூடி.

எதிர்ப்பட்டோருக்கெல்லாம் காட்டிய
என் மோனலிசா புன்னகைக்குள்
கவனமாய் மறைத்துக் கொண்டேன்
எரிச்சலையும்
காரித்துப்பப்படாத எச்சிலையும்.

கண்கள் காட்டிவிடும் தான்
ஆனாலும் என்னுடையதோ
கறுப்புக் கண்ணாடி.

மூக்கைப் பார்த்து
குத்து விடத்துடித்த கைகளில்
முஷ்டி காட்டாமல்
கை குலுக்கியோ
கை கூப்பியோ
விடை பெற்றுக் கொண்டேன்.

வீட்டிற்கு வந்த பின்னும்
மனதிற்குள் ஒரே குடைச்சல்.
அவர்களுடையதும்
என்னைப் போலவே
மோனலிசா புன்னகையோ
என்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.