Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
தலையங்கம்

உள் ஒதுக்கீடுடன் கூடிய இடஒதுக்கீடு
ஆசிரியர்

இந்திய அரசியலில் இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தனியார் துறையில் இடஒதுக்கீடு, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள், தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான தனி ஒதுக்கீடு கோரி இயக்கப் போராட்டங்கள் என இந்திய அரசியல் ‘இடஒதுக்கீட்டை’மையமிட்டு நிற்கிறது.

தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ரத்து செய்யப் படக்கூடாது என்ற போராட்டங்களில் ஒரே குரலில் பேசும் அரசியல் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீடு குறித்த விசயத்தில் மட்டும் வெவ்வேறு குரல்களில் பேசுகின்றன. இந்தக் குரல் வேறுபாடுகளில் ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி வேறுபாடுகள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுகின்றன. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இடையிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு இடதுசாரி கூட்டணி கட்சிகளுக்கு இடையிலும் 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதிலும் அதனுள் உள் ஒதுக்கீடு விசயத்திலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் உமாபாரதி உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூற, அதே கட்சியின் சுஷ்மா சுவராஜ், அது உமாபாராதியின் தனிப்பட்ட கருத்து என்று கூறி நிராகரிக்கிறார். லாலு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் சேர்த்து உள் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைக்க, முலாயம்சிங் 10% மேல் இடஒதுக்கீடே இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.



ஆசிரியர் குழு

ஆசிரியர்
ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி
நிர்வாக ஆசிரியர்
ஹாமீம் முஸ்தபா

உதவி ஆசிரியர்கள்
தமிழ்ப்பிரியன்
ம. ராஜசேகரன்

ஷிஃபா காம்ப்ளக்ஸ்,
முதல் மாடி,
142, வடக்கு வெளிவீதி,
யானைக்கல்,
மதுரை - 625 001.
தொலைப்பேசி: 0452- 5371514
puthiyakaattru@rediffmail.com

தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.100
ஆயுள் சந்தா: ரூ.1000

ஆகஸ்ட்-05 இதழ்

கம்யூனிஸ்ட்டுகள் வர்க்க வரையறைக்குள் பெண்களையும் கொண்டுவருவதால் உள் ஒதுக்கீடு குறித்து உரக்க எதுவும் கூறவில்லை. மனிதர், சாதி, வர்க்கம் என்ற எல்லா வரையறைக்குள்ளும் பாலின வேறுபாடுகள் பஞ்சமின்றிக் காணப்படுகின்றன என்பதே உண்மை.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றவே சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலம் ஆகி இருக்கிறது. இப்பொழுது பொதுவான ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் இனியொரு முறை உள் ஒதுக்கீட்டை கவனிக்கலாம் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதாயிருந்தால் இன்னும் எத்தனை அரை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. ஏற்கனவே அடித்தள மக்களும், சிறுபான்மை மக்களும் அரசியல் நிர்பந்தங்களினாலும், நெருக்கடிகளாலும் . . .

தலித் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களின் இரட்டை வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன. சிறுபான்மை முஸ்லிம்களிடமிருந்து தனித்தொகுதி உரிமைகள் அநியாயமாக பறிக்கப்பட்டது என்பது நேற்றின் கசப்பான வரலாறு. ஒடுக்கப்படுபவரின் வாழ்க்கையே இப்படி இருக்கும் போது, ஒடுக்கப்படுபவரிலும் ஒடுக்கப்படுபவராக இருக்கின்ற பெண்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. இந்த வாய்ப்பை உள் ஒதுக்கீடு விட்டால் இன்னொரு முறை கிடைக்காது என்பதுடன் நீர்த்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. சரியான நேரத்தில் முன்வைக்கப்படாமல் காலம் தாழ்ந்து போராடப்படும் கோரிக்கைகளை வென்றெடுப்பது நமது நாட்டில் அவ்வளவு எளிதானதாக இல்லை என்பது அனுபவம் கற்றுத் தருகின்ற பாடம்.

தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடங்கி இரட்டை வாக்குரிமை வரை அதைத்தான் உணர்த்துகின்றன. மகளிருக்கான உள் ஒதுக்கீட்டிலும் இந்த விபத்து நேர்ந்து விடக்கூடாது. உள் ஒதுக்கீட்டை நிராகரிப்பதன் மூலமும், காலம் தாழ்த்த வைப்பதன் மூலமும் அரசியலில் அவர்களுக்கான பங்கேற்பை மறுப்பதாகிவிடும் எனவே உள் ஒதுக்கீடுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடே தேவை.

- ஆசிரியர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.