Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005

ஆடுகளும் அத்தை மகளும்
மு. செல்லா

காட்டில்
ஆட்டுக் கிடை போட்டேன்
புழுக்கை உரத்திற்காய்.
அய்யே அசிங்கம்’ என்றாள்
பட்டணத்து அத்தை மகள்.

ஆடு
அருகே புல் மேய்ந்து
அங்கேயே புழுக்கையிட்டது
நிலத்திற்கு உரமாய்.
மூத்திரமும் அங்கே தான்.

அத்தை மகளோ
உள் நாட்டில் படித்து
அமெரிக்கா போனாள்
வேலைக்கு.

ஆடுகள் அறிந்தன
அத்தை மகள் அறியாத
‘நமக்கு நாமே’.

அத்தைமகள் தான் படித்தவள்
ஆடுகளும் நானுமல்ல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.