Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி
பீர் முகம்மது

சவூதி

கடலோட்டத்தில் நிழல் படிந் திருந்தது. அது தன்னை உள்வாங்கிக் கொண்டு வெகுதுரம் சென்றது. இருபுறமும் பாதை அமைத்துக் கொண்டு தன் போக்கில் நகர்ந்தது. ஆழமற்ற நீர்ப்பரப்பிற்குள் நின்ற மணல் மேட்டிற்கு சூரிய அஸ்த மனம் சிலாகிக்கத் தக்கதாக இருந்தது. பல வடிவங்களிலான மேகங்கள் நிறமாலையின் எல்லா நிறங்களினாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. கடல் நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் தொடு வானிற்கு நேர்த்தியான பாதை அமைத்திருந்தது. படகுகள் நீரின் ஓட்டத்தை கிழித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன. அவை எதையோ தேடுவது மாதிரியான உணர்வோடிருந்தன. இரவில் கப்பல் கள் ஒளியை உமிழ்ந்து கொண்டு ஆங்காங்கே நங்கூரமிட்டு நிறுத்தப் பட்டிருந்தன.

துண்டுகளாக சிதறிக் கிடக்கும் பாரசீக வளைகுடா மற்றும் அது சூழ்ந்திருக்கும் நாடுகளின் வரலாறு நெடியது. புனைவு சார்ந்தது. மனித நாகரீகத்தின் எல்லா உட்கூறுகளை யும் கொண்ட இவை அதற்கான நிகழ்வு போக்குகளையும் கொண்டு உள்ளன. அரபிக் கடலை வெட்டி விட்டு ஈரானிலிருந்து தொடங்கும் இவை சவூதியில் போய் முடிகின்றன. அரபிக் கடலையும் பாரசீக வளை குடாவையும் ஹர்மஸ் ஜலசந்தி பிரிக்கிறது. இதன் பெயரிடல் குறித்து பல்வேறு முரண் பாடுகள் காணப் படுகின்றன. சிலர் அரேபிய வளைகுடா என்கிறார்கள். வேறு சிலர் அந்தந்த நாட்டின் பெயரோடு அழைக்கிறார் கள். பாரசீக வளை குடாவானது சுமார் ஐந்து மில்லியன் ஆண்டு களுக்கு முந்தைய வரலாறு உடையது. சுமேரியர்கள் முதன் முதலாக இப் பகுதியில் குடியேறி அதை ஆண்டு வந்திருக்கிறார்கள். இது ஈரானின் தெற்குப் பகுதியில் யூப்ரடிஸ் மற்றும் டைக் கிரிஸ் நதிக் கரையை ஒட்டி தொடங்குகிறது. சுமேரியர் களைத் தொடர்ந்து அசிரியர்களும், பாபி லோனியர்களும் இதனோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ரோமானியர்களின் வர்த்தகத் தலமாக மாறுகிறது. நறு மணப் பொருட்கள், பவள, ரத்தினங் கள் போன்றவற்றை அதிக அளவில் ரோமானியர்கள் அவர்களிடமிருந்து வாங்கத் தொடங் கினர். பின்னர் பாபிலோனியர்கள் அதன் அதிகாரத்தைக் கைப்பற்றி னார்கள். அதன் பின்னர் அகெமியர் கள், பார்த்தீனியர் கள், சசானியர்கள் ஆகியோரின் அதிகார வரம்பிற்குள் இது வந்தது. இவர்கள் இந்தியா வோடும், சீனாவோடும் கடல்வழி வர்த்தகத்தை நடத்தினார்கள். அதன் வழியாக பல இலக்கியங்கள் பிறந்தன. பாரசீகர் களின் கடல் வழி வர்த்தகத் தைக் குறிக்கும் கதைத் தொகுப்பான “ஆயிரத்தோர் இரவுகள்” இன்றும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரசீக வளைகுடாப் பகுதிகளை பொறுத்த வரை நிலவியல் அடிப்படையில் ஈரானிலிருந்து தொடங்கினாலும் அரசியல் அடிப் படையில் ஈரான், ஈராக் ஆகியவற்றை தவிர்த்தே பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் நீங்கலாக ஓமன், கத்தர், குவைத் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன் சிலை ஏற்படுத்தி உள்ளன. இதன் வரலாறு அதன் போக்கில் நகரக் கூடியதும், ஒன்றை ஒன்று முந்திக் கொள்வதும், உரையாடுவதுமாகும்.

சவூதியானது அரேபிய தீப கற்பத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியுள்ளது. மத்திய கிழக்கின் பல்வேறு இனக்குழுக் களின் துவக்க இடமும் இது தான்.

சவூதியானது நபூத், நஜ்த், ஹிஜாஸ், ரப்-உல்-ஹாலி ஆகிய நான்கு பெரும் பாலைவனங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் நஜ்த் நீங்கலாக மற்ற பகுதிகள் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப் பாட்டில் இருந்தன. நஜ்த் பகுதி தற்போதைய ஆட்சிப் பரம்பரை யான சவூத் குடும்பத்திடம் இருந்தது. இந்த தீபகற்பம் இங்குள்ள இனக் குழுக்களின் வேறுபட்ட வாழ்வனு பவத்திற்கு மூலாதாரமானதாகும். அவர்களின் வாழ்க்கைப் பாங்கு பாலைவனச் சூழலை எதிரொலிப் பதாக இருந்தது. இவர்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். அப்பகுதியில் கூடார மிட்டு தங்களுக்குத் தேவையான வற்றை உருவாக்கிக் கொண்டார் கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் ஒட்டகக் கூட்டங்களோடு நகர்ந் தார்கள். வேறு சிலர் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடி பல பகுதிகளுக்கும் நகர்ந்தார்கள். இவர் களுக்கென்று எவ்விதமான இலட்சிய உணர்வும் இருக்கவில்லை. இவர்களே பதூயீன்கள். இந்த தீப கற்பத்தில் பேரீத்தப்பழ விவசாயம் பெருமள வில் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள்.

இன்றைய சவூதியானது 1932ல் அப்துல் அஸீஸ் இப்னு சவூத் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன் முன்னர் அது ஒருங்கிணைவை அடைந்திருக்கவில்லை. பல்வேறு பட்ட நபர்களின் கட்டுப் பாட்டில் அது இருந்தது. நஜ்தை அதிகாரம் செய்த சவூத் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். இவரே வஹ்ஹாபிசத்தின் அரசதிகார வடிவம். இந்த இடத்தில் பிரிட்டனின் வார்ப் பான அப்துல் வஹ்ஹாபை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதிருக் கிறது. வஹ்ஹாபியத்தின் தந்தை யான அப்துல் வஹ்ஹாப் நஜ்த் பாலைவனத்தை அடுத்த உயைனாவில் பிறந்தார். மதக்கல்வியை முடித்த பிறகு அடுத்துள்ள பல்வேறு நாடுகளுக் கும் பயணம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆசியா முழுவதையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்திருந்தது. மத்திய கிழக்கின் பெரும்பகுதி அப்போது துருக்கிய உதுமானியப் பேரரசின் கீழ் இருந்தது. மத்திய கிழக்கை கைப் பற்று வதற்காக குறிப்பாக பாரசீக வளைகுடாப் பகுதிகளை சொந்த மாக்கு வதற்கான கருவியாக பிரிட்டன் இவரை பயன் படுத்திக் கொண்டது. பிரிட்டனின் காலனிய அமைச்சக அதிகாரியான ஹெம்பரை இதற்காக களம் இறக்கியது. இந்தப் பணிக்காக இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த ஹெம்பர் அரபி மற்றும் துருக்கி மொழியையும் கற்றார். ஆரம்பத்தில் துருக்கி வந்த அவர் அஹ்மத் எபண்டி என்பவரி டம் ஹதீஸ்கள் குறித்து விரிவாகக் கற்றுக் கொண்டார். பல்வேறு கட்டப் பயணங்களுக்குப் பிறகு அப்துல் வஹ்ஹாபை சந்திக்கிறார். அப்துல் வஹ்ஹாபுடனான சந்திப்பு ஹெம் பருக்கு ஒரு துவக்கப் புள்ளியாக மாறுகிறது. அப்துல் வஹ்ஹாபுட னான பல்வேறுப்பட்ட உரையாடல் கள் ஹெம்பருக்கு தன்னுடைய நோக்கத்தை நிறை வேற்ற உதவின. இதற்கிடையில் பிரிட்டன் அன்று ரியாத் பகுதியை ஆண்டுவந்த இப்னு சவூதிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிறகு ஹெம்பர் அப்துல் வஹ்ஹாபை இப்னு சவூதிடம் அறிமுகப்படுத்தினார். மூளை + அரச திகாரம் இரண்டும் சேர்ந்து கொண்டதால் பிரிட்டன் தன்னுடைய நோக்கத்தை நிறை வேற்றத் தொடங்கியது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன் வைத்தல் என்ற கொள்கையின் படி இப்னு சவூத் பலரை கொன்று குவித்தார். பல்வேறுப்பட்ட வன்முறைகள் இதன் பேரில் நடந்தேறின. அப்துல் வஹ்ஹாபின் மூளை ஒரு பெரும் முடுக்கியாக இருந்தது. பிரிட்டன் தன் உளவாளியான ஹெம்பர் மூலம் சாதித்த இவ்விஷயங்கள் ஹெம்பரின் டைரிக் குறிப்பில் காணக் கிடைக்கிறது.

இந்த ஆவணம் பிரிட்டனின் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. மேலும் இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. இதை மறுத்து தூய்மைவாதிகள் தரப்பில் பல்வேறு கால கட்டங்களில் மறுப்புகள் வெளியாயின. ஆனால் அவர்களால் அந்த மறுப்புக்கான தெளிவான ஆதாரத்தைத் தெரிவிக்க முடியவில்லை. வஹ்ஹாபிசத்தின் பின் புலம் இதுதான்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் அரேபிய தீபகற் பத்தின் பெரும்பகுதி சவூத் குடும்பத் திடம் இருந்தது. இது துருக்கிய உதுமானிய பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் அவர்கள் இப்னு ரஷீத் என்பவரைத் தூண்டி விட்டு சவூத் குடும்பத்தினரிடமிருந்த பகுதிகளைக் கைப்பற்றினர். இதனால் சவூத் குவைத் திற்குச் சென்றார். பின்னர் சவூத்தின் மகன் அப்துல் அசீஸ் குவைத்திலிருந்து திரும்பி வந்து 1901ல் பிரிட்டன் துணையுடன் தன் மூதாதையர் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். பிரிட்டனின் முழு ஆதரவு இருந்ததால் அவரால் தன்னை விரிவு படுத்திக் கொள்ள முடிந்தது. 1902ல் மக்கா மற்றும் மதீனாவைக் கைப்பற்றினார். வஹ்ஹாபிய கருத்தியல் படியான அனைத்து வித அரங்கேற்றங்களையும் அப்துல் அசீஸ் செய்தார். அறிவியல் வளர்ச்சியை அவர் வஹ்ஹாபிய அடிப்படையில் பார்த் தார். தொலைபேசி, ரேடியோ, ஷவர் போன்றவை இஸ்லாமிய அடிப்படைக்கு விரோதமாகப் பார்க்கப் பட்டது. பின்னர் அவரா லேயே அது ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. (தற்போதைய தூய்மை வாதிகளின் லேப்டாப், சி.டி, டி.வி.டி, வீடியோ கான்ப்ரன்ஸ் மாதிரி).

அப்துல் அசீஸ் எல்லைகளை விரிவுபடுத்தி ரியாத்தை தன் தலை நகராக மாற்றினார். 1932ல் அரேபிய தீபகற்பம் முழுவதுமான பகுதி மன்னராட்சி சவூதி அரேபியா என பெயரிடப் பட்டது. முப்பதுகளில் கண்டுபிடிக் கப்பட்ட பெட்ரோ லானது சவூதிய வளர்ச்சியின் பெரும் துவக்கப் புள்ளி. இது சவூதியின் வடிவத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சவூதிகளின் வாழ்க்கைத் தரம் இதனால் மாறியது. பெட்ரோ - குழாய்கள் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டன. இரண்டாம் உலகப் போரின் மிக முக்கிய இயங்கு சக்தியாக பெட்ரோல் மாறியது. சவூதியின் வடிவமைப்பே பெட் ரோலாக மாறியது. இவருக்குப் பிறகு அவருடைய மகனான பைசல் பதவிக்கு வந்தார். பைசலின் ஆட்சிக் காலத்தில் சவூதி இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பல நாடுகளில் இருந்தும் குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வரத் தொடங்கினர். (வளைகுடா நாடு களில் இந்தியர்கள் முதன் முதல் வேலைக்காக வரத்தொடங்கியது சவூதியில் தான்) இவர்களின் உழைப்பு அவர்களின் வாழ்வியக்கமாக இருந்தது. ஐரோப்பிய மூளையும், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களின் மலின உழைப்புமே இவர்களை இன்று ஒட்டகங்களிலிருந்து, பென்ஸ் காருக்கு நகர்த்தி வருகிறது. காரிலிருந்து வரும் புகை எல்லா இடை வெளி களையும் இட்டு நிரப்பி வருகிறது.

பஹ்ரைன்

பஹ்ரைனின் வரலாறு காலத்தில் முந்தியதாகும். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளை கொண்டிருக்கும் பஹ்ரைன் துண்டு களாகச் சிதறிக் கிடக்கிறது. சுமேரி யர்கள் இதை தில்மன் என அழைத் தனர். இது இஸ்லாமுக்கு முந்தைய வரலாறு உடையது. ஆரம்பத்தில் சுமேரியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்கள் பவள வர்த்த கத்தை பிற நாடுகளுடன் நடத்தி வந்தனர். இஸ்லாமிய வரலாற்றுத் துவக்கத்திற்கு முன்பு வரை இது கிரேக்கர்களால் டைலஸ் என்றழைக் கப்பட்டது. கிரேக்கர்களால் மண் பாண்டங்கள், பல்வேறு வித கைவினைப் பொருட்கள், இரும்புக் கருவிகள், போன்றவை இங்கிருந்து தயார் செய்யப்பட்டு மற்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. இயல்பாகவே அமைந்த கடல்வெளி அதற்குத் திறவுகோலாக இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் பிரதி நிதியான நெர்சியஸ் இங்கு வருகை தந்தார். அதன் பிறகு பஹ்ரைன் கிரேக்கர்களுடனான உறவைத் தொடங்கியது. இவர்கள் அராத், அல்டைர், சமாஹிஜ் போன்ற புதிய கிராமங்களை கண்டடைந்தார்கள். (இந்த கிராமங்களை ஒட்டியே தற்போது விமான நிலையம் அமைந் துள்ளது) கி.பி. நான்காம் நூற்றாண் டில் பஹ்ரைன் சசானிய பேரரசோடு இணைக்கப்பட்டது. சசானியர்கள் இதனை இந்தோ பள்ளத்தாக்கோடு தொடர்பு கொள்ள வைத்தனர்.

வளைகுடா நாடுகளில் சவூதிக்கு அடுத்ததாக இஸ்லாமிய பரவலாக்கம் முதன் முதலாக பஹ்ரைனில் தான் நடைபெற்றது. ஆறாம் நூற்றாண்டில் பஹ்ரைன் மூன்று பகுதிகளாக அறியப்பட்டது. அல்ஹஜ்ர் (சவூதி யின் தற்போதைய அல்-அஹ்ஸா) அல்-காத் (சவூதியின் அல்-கதீப்) அவால் (பஹ்ரைன்) அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த இனக்குழு பனி அப்துல் - கைஸ் என்றழைக்கப் பட்டது. இவர்கள் அவால் என்ற சிறு தெய்வத்தை வழிபட்டனர். இதன் பெயரே இன்று அவால் என அறியப்படுகிறது. இந்த தெய்வத்திற் கான கோயில் இன்றும் பார்பர் என்ற இடத்தில் காணப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இஸ் லாமிய பரவலாக்கத்திற்கு பிறகு நபித் தோழரான அல்-ஆலா-அல் ஹத்ராமி என்பவர் பஹ்ரைனை ஆட்சி செய்தார்.

அவருடைய காலத்திற்குப் பிறகு பஹ்ரைன் உமையத் கலிபாவான இரண்டாம் உமரின் கீழ் வந்தது. இவருடைய காலத்தில் தான் முதல் பள்ளி வாசலான அல்கமீஸ் நிர்மாணிக் கப்பட்டது. இன்றும் இதன் உடைந்த வடிவங்களைக் காண முடிகிறது. மங்கோலியர்களின் தலைவரான செங்கிஸ் கானின் கட்டுப்பாட்டில் இது சிறிது காலம் இருந்தது. பின்னர் உமய்யத் களில் கீழ் வந்தது. பல்வேறு பட்ட அரசுகள் பஹ்ரைனை பல விதத்தில் சுரண்டின. கடைசியாக 1861ல் இது பிரிட்டனின் காலனி யாதிக்கத்திற்குள் வந்தது. பிரிட்டன் 1930களில் இங்கு பெட்ரோலைக் கண்டெடுத்தது. மத்திய கிழக்கில் முதன் முதலாக பெட்ரோல் கண்டறியப் பட்ட இடமும் இது தான். பிரிட்டன் கண்டுபிடிக்கப் பட்ட பெட்ரோலை வைத்து பல்வேறு விதமான விரிவாக் கப் பணிகளைச் செய்தது. மருத்துவ மனை ஒன்று அவர்களுக்காக அமைக்கப்பட்டது. இந் நிலையில் பாரசீக மரபாக ஈரானிலிருந்து பலர் இங்கு குடியேறத் தொடங்கினர். நாளடைவில் அவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 1950களில் பிரிட்டனுக்கு எதிராக பல்வேறு வித கலகங்கள் நடை பெற்றன. பஹ்ரைன் விடுதலைப் படை உருவாக்கப்பட்டது. தொடர்ச்சி யான போராட்டங்களின் பலனாக 1971ல் பிரிட்டன் வெளி யேறியது. ஷேக் ஈசா என்பவர் தலைமையில் மன்னராட்சி ஏற் பட்டது. பஹ்ரைன் அரசியலமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டது. இதன் பிறகு பஹ்ரைன் உலக வரை படத்தில் இடம் பிடித்தது. துண்டுகளாக சிதறிக் கிடந்த இடங்கள் இணைக்கப் பட்டன. இந்நிலையில் ஈரான் பஹ்ரைனை உரிமை கொண்டாடி யது. பின்னர் ஜ.நா. முன்னிலையில் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் மக்கள் சுதந்திர நாட்டை விரும்பினர்.

இதன் பிறகு ஈரான் விலகிக் கொண்டது. சவூதி அரேபியாவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு எண்பதுகளில் சவூதி-பஹ்ரைன் கடல் வழி பாலம் அமைக்கப்பட்டது. இது உலகில் நீளமான பாலங்களின் பட்டியலில் வரக்கூடியது. தொண் ணூறு களில் பஹ் ரைன் - கத்தர் மோதல் ஏற்பட்டது. ஹவார் என்ற தீவை உரிமை கொண்டாடியதில் இரு வருக்கும் இடையே உராய்வு உண்டானது. இறுதியில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஹவார் தீவு பஹ்ரைனுக்கு சொந்த மானது. இருநாடுகளிலும் தன் கடற்படை முகாமை அமைத்திருக்கும் அமெரிக்கா இருநாட்டு மோதலில் தன்னை பார்வையாளனாக வடி வமைத்துக் கொண்டது. தற்போதும் தன் ராணுவ முகாமை இந்நாட்டில் அமைத்தி ருக்கும் அமெரிக்கா இதனை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக் கிறது. தூய இஸ்லாம் பேசும் சமூகத் தின் சுய-வெளிப்பாடு இதுதான். இதன் மூளையையும் இந்திய (கேரளீய) உழைப்பையும் உள்வாங்கி கொண்டு பஹ்ரைன் அதன் போக்கில் நகர்ந்து கொண்டி ருக்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com