சு.ம.கருநா கவிதைகள்
பிச்சிப்பூ மேனி பூக்கும்
வனாந்தரம் தேடும் உடலில்
சிறகுகள் உருகி தீயென விரியும் நீர்வெளியில்
பாறையின் மீது நிர்வாணமாய் அமர்ந்தது
புணர்தலின் சந்திப்பு
எப்போதாவது வந்து
ஸ்பரிசம் கொள்ளும் பேச்சுக்கள்
சிறியாநங்கையின் சயனம்
வாழ்வின் சூட்சமங்களை
வேர்பிடுங்க
மவுனமித்து உலாவுகிறது
தீக்குதிரை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|