Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
ஜீவன் பென்னி கவிதைகள்


காத்திருத்தல்

குடும்பத்தோடு
இடம்பெயர்ந்து விட்ட
வாடகை வீட்டில்
பிடிவாதமாயிருக்கின்றன
ஒருமுறை பயன்படுத்திய
ஸ்டிக்கர் பொட்டுக்கள்
மீண்டும் அவள் நெற்றி
அல்லது புதியதொரு நெற்றியேனும்
கிடைக்குமென்று. . .

மறந்து போனநாள்

கடைசியாக மழைபெய்த நாள்
பழையதாகிக் கொண்டிருக்கிறது
இயல்பாக மறக்க ஆரம்பித்திருக்கிறது
எல்லா நாட்களையும் பாதுகாக்கும் அவசரத்தில்
கை தவறிய நாளது.
ஓர் இலை விழுவதற்கான எல்லாக்
காரணங்களும் இதற்கு பொருந்துகின்றன
சிறு நீரோடையொன்றின் குளிர்ச்சியின்
மிக மெதுவாக அந்தநாள் என்னை
கடந்து போகின்றது
சாலையைக் கடக்கும் பட்டாம்பூச்சிபோல்
பின்னகரும் மரம் போல்

அழுகை

இன்று பெய்யும் மழை
மழை போலவேயில்லை
விரிந்திருக்கும் பெரும் கருமேகத்திலிருந்து
ஒரேயொரு துளியெனப் பெய்கிறது
பெரும் மழை
இன்று பெய்யும் மழை
நேற்றைய மழைபோலில்லை
உனதொவ்வொரு அங்கத்திலிருந்தும்
ஒரே தடவையில் ஒரேயொரு துளியெனப்
பெய்கிறது பெரும்மழை
இன்று பெய்யும் மழை
நாளைய மழைபோலிருப்பதில்லை
அவ்வளவு உப்புக்கரிப்புடன்
பெய்கிறது
பெரும் மழை
இன்று பெய்த மழை
இன்று பெய்தது போலவேயில்லை
அத்தனை பழசு



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.