Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
ஜே.பி.அர்ச்சனா

குவாண்டனாமோ
சட்ட மீறல்களை பட்டியலிடும் ஐ.நா. அறிக்கை

அமெரிக்கா நாகரிக மனிதன் வாழ முடியாத இடமாக மிக வேகமாக மாறிவருகிறது. குறிப்பாக ஜார்ஜ்புஷ் தலைமையில் அமெரிக்கா வில் எங்கும் பயப்பிராந்தி தலை விரித்தாடுகிறது. எதைத் தொட்டா லும் வெடித்து விடுமோ, யாரைப் பார்த்தாலும் பயங்கரவாதியாக இருக்குமோ, யார் இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் தேச விரோதத் திட்டம் தீட்டுகிறார்களா எனப் பீதியில் முழ்கிக் கிடக்கிறது ஆளும் வர்க்கம். அந்தப் பீதியில் சாதாரண மனிதனின், கௌரவான வாழ்க்கை நடத்தத் தேவையான, அற்பசொற்ப உரிமைகளும் ராணுவ எந்திரத்தின் காலடியில் நசுக்கப்படுகின்றன. வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டுப் பார்ப்பது முதல் உள்நாட்டுக் குடிமக்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது வரை எதையும் செய்ய அரசு முயற்சிக்கிறது. இத்தொடர் நிகழ்வு களின் ஒரு அம்சமாக அமெரிக்கப் பாராளுமன்றம் ‘சித்திரவதை’ என்ற பதத்தை மறுவரையறை செய்து சட்டமியற்றியுள்ளது. பல கொடுமை யான விசாரணை முறை களை ‘சித்திரவதை’ என்பதிலிருந்து விலக் களிக்கும் இச்சட்டம் அடிப்படை உரிமையாகிய ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனுவை அமெரிக்க குவாண்டனமோ சிறைக் கைதிகளுக்கு மறுக்கிறது. சமீபத்தில் வெளியான குவாண்டனமோ சிறைச் சூழ்நிலை குறித்த ஐ.நா. அறிக்கை யொன்று அச்சிறைச்சாலையில் நடக்கும் மனிதத் தன்மையற்ற, சர்வ தேச, அமெரிக்கச் சட்டங்களுக்கு முரணான கொடுமைகளைப் பட்டியலி டுகிறது. அறிக்கையை ஒட்டி எழுந்த சர்வதேசக் கண்டனக் குரல்களுக்கு ஆணவமான பதிலாகவும், தன் அதிகாரிகளை சர்வதேசச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் இச் சட்டத்தினை அமெரிக்கா இயற்றி யுள்ளது. சர்வ தேசக் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கும் ஐ.நா. அறிக்கை பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

அமெரிக்கக் கடற்படைத் தள மாகிய குவாண்டனாமோ பே என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ‘சிறைச்சாலையில்’ கைதிகளின் நிலை பற்றி ஆராய்கிறது ஐ.நா. சபையின் பொருhளாதார சமூகக் கவுன்சிலின் மனித உரிமைக் கமிஷனின் இந்த அறிக்கை. முறையற்ற தடுப்புக் காவல் பற்றிய செயல் குழுவின் தலைவர் லெய்னா செரௌகி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நடுநிலைமை குறித்த விசாரணை அதிகாரி லியாண்ட்ரோ டெஸ் போய், சித்திரவதை மற்றும் இதர கொடூர மனிதத் தன்மையற்ற நடத்தை மற்றும் தண்டனை குறித்த விசாரணை அதிகாரி அஸ்மா ஜெகாங் கீர், உடல் மன நலனுக்கான உரிமை கள் குறித்த விசாரணை அதிகாரி பால் ஹண்ட் ஆகிய உறுப்பினர் களைக் கொண்ட இக்குழு ஜுன் 2004க்குப் பின் கைதிகளின் நிலை குறித்து அலசி, அச்சிறையின் சட்டப்பூர்வ தன்மை, மனித உரிமை கள் மீறல் போன்றவற்றை ஆராய்ந்து தன் முடிவுகளையும் பரிந்துரை களையும் வெளியிட்டுள்ளது.

குவாண்டனாமோ சிறைச் சாலைக் குள் அனுமதி மறுப்பதிலிருந்து, தகவல்கள் தராமலிருப்பது, கைதி களுடன் உரையாடுவதைத் தடை செய்வது என அமெரிக்க அரசின் பல்வேறு முட்டுக் கட்டை களைச் சந்தித்த இக்குழுவிற்கு அமெரிக்க அரசு அளித்த தகவலின் படி, சுமார் 520 கைதிகள் அச்சிறையில் உள்ளனர். மொத்தக் கைதிகளில் மூவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப் பட்டு அங்கு விசாரணை நடத்தி குற்றமற்றவர் என விடுதலை செய்யப் பட்டு உள்ளனர். ஏழு பேர் மீது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ‘ராணுவ உத்தரவு’ என அறியப்படும் அமெரிக்க அரசுச் சட்டத்தின் கீழ் இச்சிறையில் அடைக் கப்படும் கைதிகளை கால வரையறை இன்றி குற்றம் சுமத்தாம லும், விசாரணை நடத்தாமலும், சிறையில் வைத்திருக்கவோ, அல்லது இராணுவ நீதிமன்றம் மூலம் விசாரிக்கவோ அமெரிக்க அரசுக்கு உரிமை உள்ள தாக அமெரிக்கா கூறிக் கொள்கிறது. இந்த விதிமுறை சட்ட விதிமுறை களையும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அடிப் படையான மனித உரிமைகளையும் மீறுவதாக வும், சிவில் மற்றும் அரசியல் உரிமை கள் குறித்து சர்வ தேசச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்கிறது இவ்வறிக்கை (பக்.11)

‘எதிரிப் போராளிகள்’ எனக் குறிப்பிட்டு சிறையில் அடைக்கும் அமெரிக்க அரசின் செயலை முறை கேடானது என விரிவான ஆதாரங் களோடு குறிப்பிடுகிறது. அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய ஆக்கிர மிப்பைத் தடுப்பது என்பதல் லாமல், தகவல் சேகரிப்புக்குப் பயன் படுத்தப் படும் இத்தடுப்புக் காவல் ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகும் எனக் கூறுகிறது அறிக்கை.

சிறையில் அடைக்கப்பட்டி ருக்கும் பல கைதிகள் அமெரிக்கா விற்கு எதிராக எந்த ஆயுதம் தாங்கிய போராட்டமும் நடைபெறாத நாடு கள் மற்றும் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள். போஸ் னியா நாட்டில் கைது செய்யப்பட்ட அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் இதற்கு சரியான எடுத்துக் காட்டு எனக்கூறும் இவ் வறிக்கை பயங்கரவாதம் தலை தூக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசுகள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அலசுகிறது. சில சந்தர்ப்பங்களில் கைது, தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது எனக்கூறும் இவ்வறிக்கை, அந்நடவடிக்கைகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கான உரிமை, கைதுக் கான காரணங்கள் தெரியப்படுத்து தல், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடித்தல், சட்ட உதவிக்கான உரிமை போன்றவை. இவற்றை மீறும் எந்த நடவடிக்கை யும் கவலைக்குரியதே என்கிறது.

குவாண்டனாமோவில் சிறைவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மேற்கண்ட உரிமைகள் நீண்ட கால மாக மறுக்கப்பட்டு வருகிறது. ஜுன் 2004ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இக்கைதிகளுக்கு நீதி விசாரணைக்கான உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்ததை ஒட்டி, அரசு ‘போராளிகளின் நிலையைப் பரி சீலிக்கும்’ அமைப்பு ஒன்றை ஏற்படுத் தியது. இந்த அமைப்பின் உறுப் பினர் ள் அமெரிக்க ராணுவத் தின் மிகக் கீழ்நிலையில் பணியாற்றும் மூன்று அலுவலர்கள். இந்த அமைப்பை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறானது என்று அமெரிக்க நீதி மன்றங்கள் தீர்ப்பளித் துள்ளன. மேலும் அமெரிக்க அரசின் கைதிகள் குறித்த வருடாந்தரப் பரிசீலனையும் சர்வதேச உரிமைச் சட்டத்தின் கீழ் போதுமானதல்ல. ஏனெனில் நீதிமன்றம் என்ற வரை யறைக்கு இந்த அமைப்புகள் ஒத்துவர வில்லை என்கிறது அறிக்கை. போதாத தற்கு இந்த அமைப்பு தன்னுடைய மிகக் குறைவான அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய உத்தர விட்ட சிலரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்யவில்லை.

மேலும் அமெரிக்க அரசு 2005ல் பிறப்பித்த ‘கைதிகளை நடத்தும் விதம் குறித்த சட்டமும்’ மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது. குவாண் டனாமோ சிறையின் நீதி விசாரணை முறை சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தின் பிரிவுகள் 105 மற்றும் 106 மற்றும் உபரி நடைமுறைகள் ஐன் பிரிவு 75 ஆகிய வற்றுக்கு முரணானது.

‘ராணுவ உத்தரவு’ படி, குற்றஞ் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரை அரசே நியமிக்கும். அவரை நீக்கவும் அரசுக்கு உரிமை உண்டு. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சில சாட்சி ஆவணங்களைப் பார்வை யிட குற்றஞ்சாட்டப் பட்ட வருக்கோ அல்லது அவரது வழக்கறிஞருக்கோ உரிமையில்லை. இவ்வாவணங்கள் குறித்த விசாரணையின் போது வழக்கறிஞரைப் பங்கேற்காமல் தடுக் கவும் முடியும். மேற்கண்ட விதிமுறை கள் வழக்கறிஞரின் பணிகள் குறித்த அடிப்படை விதிகளை மீறுவ தோடு, சர்வதேச சிவில், அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 14(1), 14(3) (b) மற்றும் (ன)ஐ மீறுவனவாகும். மேல்முறையீடு சம்பந்தமான பிரிவு 14(5)ம் மீறப் படுகிறது.

சித்திரவதைகள் மற்றும் இதர மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்து விவரிக்கும் இவ்வறிக்கை, ‘சித்திரவதை குறித்த சட்டங்கள் சர்வ தேசத் தரத்திற்கு இல்லை’ என்கிறது.

‘தெளிவற்ற குழப்பும் விதி முறை கள்’ என்ற தலைப்பில் இவ்வறிக்கை அமெரிக்கா 2001ம் ஆண்டு முதல் சித்திரவதைக்கு எதிரான சட்டங் களைத் தளர்த்தி வந்துள்ளது எனச் சுட்டிக் காட்டுகிறது.

* நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே நிலையில் இருக்க வைப்பது. (எடுத்துக்காட்டாக, நிற்க வைப்பது)
* 30 நாட்கள் வரை தனிமைச்சிறை.
* கைதிகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் போதோ விசாரணை நடத்தும் போதோ தலையை கோணிப் பையால் மூடிவிடுவது.
* இருட்டறைக்குள் அடைப்பது.
* எல்லாவித உபயோக சாதனங்களையும் மறுப்பது.
* எல்லா ஆடைகளையும் அகற்றுவது.
* தொடர்ச்சியாக 20 மணி நேரம் விசாரிப்பது.
எ ஃபோபியாக்களைப் பயன்படுத்துவது. (எடுத்துக்காட்டாக, நாய்கள் மீது ஃபோபியா கொண்டவர்களை நாய் களை வைத்து விரட்டுவது)

போன்றவை அங்கீகரிக்கப் பட்ட சித்திரவதை முறைகளாக 2002ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. 2005ல் இவை மாற்றப்பட்டு

* உபயோக சாதனங்களை மறுப்பது.
* மிக அதிகமான வெப்பம் / குளிர் சூழ் நிலைக்கு ஆளாக்கப்படுதல்.
* இருட்டறை.
* தட்ப வெப்பச் சூழ் நிலையை அடிக்கடி மாற்றிய மைப்பது. முடை நாற்றங்களைப் பரப்புவது.
* தூக்க நேரங்களை அடிக் கடி மாற்றிய மைப்பது.
* தனிமைச்சிறை


போன்ற நடைமுறைகள் அமலில் உள்ளன என்று கூறும் இவ்வறிக்கை இந்த நடவடிக்கைகள் நடை முறையில் கடுமையான சித்திர வதைகளாக உள்ளன என்று கூறுகிறது. (பக்.23)
உடைகள், உபயோகச் சாதனங் கள் மறுக்கப்படுதல், வெளிச்ச மின்மை, பேசத் தடை, கலாச்சார மதரீதியான துன்புறுத் தல்கள், பயமுறுத்தல்கள், சிறை வாசத்தின் முடிவு பற்றிய நிச்சயமற்றத் தன்மை ஆகியவை தீவிரமான மன நலப் பிரச்சனைகளை உருவாக்கு கின்றன. தனிமைச் சிறை 30 நாட்கள் என்றாலும் சிறிய இடைவெளி விட்டு 18 மாதங்கள் வரை தனி யறையில் அடைக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் சர்வ தேச சிவில் அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 10(1) மற்றும் பிரிவு 7க்கு முரணானதாகும் (பக்.26)

மிக அதிகமான வன்முறை கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப் படுகிறது. கைதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்லும் போது கை கால்களைக் கட்டிப்போடுவது, சங்கிலிகளால் பிணைத்தல், அடி, உதை, கழுத்துக்கு மேல் கோணிப்பைகளால் மூடுவது போன்றவற்றிற்கு புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. உண்ணா விரதப் போராட்டம் இருக்கும் கைதி களின் மூக்குக்குள் குழாயை பலவந்த மாக நுழைத்து உணவு கொடுத்தல், முரட்டுத்தனமாக குழாயை நுழைத்து இரத்தம் வரவைத்தல், அளவு அதிக மான குழாய்களை வேண்டுமென்றே திணிப்பது, ஒரே நாளில் பலமுறை குழாயை நுழைத்து வெளியே எடுத் தல் என்பதாக உணவு கொடுத்தல் என்ற பெயரில் சித்திரவதைகள் நடக்கின்றன.

சத்தமான பாடல்களை ஒலி பெருக்கியில் அலற விடுவது. ஒளி மிகுந்த விளக்குகளைப் பயன் படுத்துவது, கைதிகளைப் பெண்கள் முன்னால் நிர்வாணப் படுத்துவது, பெண்களின் உள்ளாடைகளைத் தலையில் அணிய வைப்பது, கைதி களின் பெண் உறவினர்களைக் கீழ்த்தரமாகவும் வேசிகள் எனவும் ஏசுவது, நிர்வாணமாக இருக்க வைப்பது, முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி கண் எரிச்சலுட னும் மூச்சு விட முடியாமலும் இருக்கும் போது அடி, உதை என்ப தான பயமுறுத்தல்கள் அல்லது தண்டனை நடவடிக்கைகள் மிக அதிகமான வலியையும் துன்பத்தை யும் தருவதால் அவை ‘தடை செய்யப்பட்ட சித்திரவதை’ என்ற வரையறைக்குள் வருவதாகும் என் கிறது அறிக்கை (பக்.26)

விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்காக கைதிகள் நாடு விட்டு நாடு கொண்டு செல்லப்படு தலும் நிகழ்கிறது. எடுத்துக் காட்டாக அல் குதாசி என்பவர் ஏப்ரல் 2004ல் ஏமன் நாட்டிற்குக் கடத்தப்பட்டார். அவருடைய சம்மதமின்றி ஒரு ஊசி போடப்பட்டது. அத்துடன் நினைவு தப்பி விட்டது. விழித்துப் பார்த்த போது அவர் சானா சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அங்கு அடி உதை, பட்டினி போடப்படுதல் இவ்வகை நடவடிக்கைகள் சித்திர வதைக்கெதிரான சர்வதேசச் சட்டத் தின் பிரிவு 3 மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 7 போன்றவற்றை மீறுகிறது என்கிறது இந்த அறிக்கை.

சித்திரவதை போன்ற சர்வதேசச் சட்டத்திற்கு எதிராக நடை பெறும் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர் கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதோடு நடவடிக்கைகளிலிருந்து அந்த அதி காரிகள் காப்பாற்றப் படுகின்றனர்.
மதரீதியான உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளும் வழக்கமாக நடத்தப்படுகின்றன.எடுத்துக்காட்டாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பெண் கள் திடீரென விசாரணைக்கு நடுவில் நிர்வாண நடனங்களை ஆடுவது, மாதவிடாய் இரத்தத்தை கைதிகளின் உடலில் பூசுவது, தொழுகை நடத்த விடாமல் தடுப்பது, குரான் போன்ற மத நூல்களை மிதிப்பது, அவற்றின் மீது ஏறி நிற்பது போன்றவை.

சிறைச்சாலையின் சூழ்நிலை கள் கைதிகளின் மன ஆரோக்கி யத்தைப் பாதிப்பதுடன் மருத்துவ உதவியும் மறுக்கப்படவோ அல்லது தேவையற்ற காலதாமதத்திற்கோ உள்ளாக்கப் படுகிறது. ராணுவ மருத்துவர்களும் மருத்துவ நெறி முறைகளை மீறி நடந்து கொள் கின்றனர். நோய்கள், வலிக்கும் பாகங்கள் ஆகியவற்றை ராணுவத் தினருக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் ராணுவம் அவற்றைச் சித்திர வதைக்குப் பயன்படுத்துவதற்குத் துணை போகின்றனர். குறுகிய சிறைக் கூண்டுகள் சுகாதாரமற்ற சூழ்நிலை, சித்திரவதை நடவடிக்கை கள், தனிமைச்சிறை மதரீதியான துன்புறுத்தல்கள் எல்லாமாகச் சேர்ந்து கைதிகளுக்கு அவர்கள் வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழு வதும் நோயாளிகளாகவே கழியக் கூடிய நிலையை உருவாக்கு கின்றன. சிறைச்சாலையிலேயே மனநலம் பாதிக்கப்படுவதும் உண்டு. 2003ம் ஆண்டில் மட்டும் 350 தற்கொலை முயற்சிகள் நடத்துள்ளன.

இவ்வாறு சர்வதேசச் சட்டங் கள் மற்றும் குவாண்டனாமோ பே சிறைச் சூழ்நிலைகளை அலசும் இவ்வறிக்கை, சர்வதேச மனிதா பிமானச் சட்டங்கள் இச்சிறைச் சாலைவாசிகளுக்கும் பொருந்தும் என்றும், அவர்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைச் சட்டத் தின் 9வது பிரிவின்படி மேல் முறை யீடு செய்யத் தகுதியானவர் கள் என்றும், அவ்வுரிமையை மறுக்கும் அமெரிக்க அரசின் செயல் சட்ட விரோதம் என்றும், அமெரிக்க அரசு முறையான நீதி விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்றும், அரசே சித்திரவதை நடவடிக்கை களுக்குத் துணை போகிறது என்றும் முடிவு கொள்கிறது.

அத்துடன்
1) குவாண்டனாமோ சிறைவாசிகளை உடனடியாக சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்.
2) உடனடியாக அச்சிறைச்சாலையை மூட வேண்டும். அனைத்துவகை சித்திரவதை, புண்படுத்தும் நட வடிக்கைகளையும் உடனடியாகக் கைவிட வேண்டும்.
3) கைதிகளுக்குப் புகார் செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.
4) சித்திரவதை நடவடிக்கைகள் பாரபட்ச மற்ற விசாரணைக்குள்ளாக்கப்பட்டு சம்பந்தப் பட்டவர்கள், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும்.
5) பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்.
6) மருத்துவ நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
7) ஐ.நா.சபையின் அதிகாரம் பெற்றவர் கள் சிறைச்சாலையைப் பார்வை யிடவும், கைதிகளிடம் தனிமையில் விசாரணை நடத்தவும் அனுமதிக்கப் பட வேண்டும்.

என்ற பரிந்துரைகளையும் அறிக்கை முன்வைக்கிறது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com