Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
இடம் மாறுகிற காட்சிகள்
சிறீ.நான். மணிகண்டன்

திறந்திருக்கின்ற என் சாளரத்தின் வழியாக
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பச்சைக் கடலும்
நீலநிற மலைத் தொடர்களும்
நீர்ப்பரப்பின் மேலாக பறக்கின்ற
கடற் காக்கைகளையும்
எனது அறைக்குள்ளும்
ஒரு மேசை, கறுப்பு மற்றும்
சிவப்பு எழுது கோல்களும்
மை நிரம்பிய கண்ணாடிக் குடுவைகளும்
பரவசத்தில் ஆழ்த்தும் உங்களை
சலிப்பேற்படும் காலங்களில்
அறையிலிருந்து நான் வெளிப்படும் போது
சாளரத்தினூடாக
காட்சிகள் எனதறைக்குள்ளும்
எனதறைக் காட்சிகளுக்குள்ளும்
இடம் மாறிக் கொண்டிருப்பதை
நீங்கள் பார்க்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.