கலைந்த அழகு
பாரதி மணியன்
என் தங்கையின் வருகையின் போது
கையில்
துரு துரு குழந்தை
வைத்த பொருள் வைத்த இடத்தில்
இருக்க விடாமல்
கலைத்துப் போட்டபடி.
மகிழ்ச்சியையும் மீறி
மெல்ல எழும்பிய எரிச்சலை
மென்று விழுங்கியிருக்கிறேன்
தங்கை ஊருக்கு கிளம்பி விட்டாள்
வைத்த பொருள் வைத்த இடத்தில்
கலைந்து விடாமல். . .
ஏதோ ஒன்று குறைகிறது
அது கலைத்துப் போட்டதில்
இருந்த அழகு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|